பக்கம் எண் :

சீறாப்புராணம்

277


முதற்பாகம்
 

     694. ஈதுநன் றெனவொத் தனைவரு மிசைத்தா

              ரெழின்முகம் மதுவுமுன் னிலையாய்ப்

         பாதையி னடப்பப் பெரியவ னருளின்

              பணிகொடு சபுறயீ லிறங்கிப்

         பேமற் றணுகி யொட்டகக் கயிற்றைப்

              பிடித்தன ரரைநொடிப் பொழுதிற்

         றீதற நெறியுந் தெரிந்தன நான்கு

              திசைகளுந் தெளிதரத் தெரிந்த.

15

     (இ-ள்) அவ்வண்ணம் அபூபக்கரவர்கள் கூறியவார்த்தைகளை யாவர்களுங்கேட்டு இதுவே நல்ல சமாச்சாரமென்று அனைவர்களும் சம்மதித்துச் சொன்னார்கள். பின்னர் அழகிய நபிமுகம்மது சல்லல்லாகு அலைகிவசல்ல மவர்களும் யாவர்கட்கும் முன்னிலையாய் அப்பாதையின்கண் நடக்கப் பெரியவனான ஜல்லஜலாலுஹூவத்த ஆலாவின் கிருபையினது கட்டளைகொண்டு ஜிபுறீல் அலைகிஸ்ஸலாமவர்கள் வானலோகத்தை விட்டும் பூமியின் கண்ணிறங்கிப் பேதமில்லாது நபிகணாயகமவர்களின் ஒட்டகத்தை நெருங்கி அதன் நாணயக் கயிற்றைப் பிடித்தார்கள். அவ்விதம் பிடிக்கவே ஒரு அரைநொடிப் பொழுதிற் குற்றமறப் பாதையுந் தோன்றினது. தேர்ச்சியுறும்படி நான்கு திக்குகளுந் தெரிந்தன.

 

     695. தலைமைமுன் னிலையாய் முகம்மது நடப்பச்

              சாருநன் னெறியினைச் சார்ந்தோம்

         நிலமிசை கரிய மேகமொன் றெழுந்து

              நிழலிவர்க் கிடுவதுங் கண்டோ

         மலைகடற் றிரைபோற் கானலில் வெதும்பி

              யலைந்திடு வருத்தமுந் தவிரப்

         புலனுறப் புனலும் பருகுவஞ் சிறிது

              போழ்திலென் றனைவரும் புகன்றார்.

16

     (இ-ள்) அப்போது அப்பாதையின் கண்ணுற்ற யாவர்களும் நபிமுகம்மது சல்லல்லாகு அலைகிவசல்ல மவர்கள் முன்னிலையினது நாயகராய் நடக்கவே, நாம் அடையக்கூடிய நல்ல பாதையினையடைந்தோம். கருநிறத்தையுடைய மேகமொன்றெழும்பி இப்பூமியின் மீது அவர்களுக்கு நிழலிடுவதையும் பார்த்தோம். அலைகளையுடைய சமுத்திரத்தினது திரையைப் போல வெயிலினால் வாட்டமுற்று அங்கு மிங்கும் அலைந்து திரியும் துன்பமும் தீரும்படியாகவும், இந்திரியங் களுணர்ச்சியுறும்படியாகவும், இன்னங் கொஞ்ச நேரத்தில் தண்ணீருங் கொடிப்போமென் றொருவர்க் கொருவர் பேசிக் கொண்டார்கள்.