பக்கம் எண் :

சீறாப்புராணம்

289


முதற்பாகம்
 

     729. வனநதிப் பெருக்கெடுத் தெறிந்து மால்வரை

        தனையமிழ்த் திடவரு வதுகொல் சார்ந்தநும்

        மினமுட னெழுகவென் றிலங்கும் வள்ளறன்

        கனவினிற் சபுறயீல் கழறிப் போயினார்.

7

     (இ-ள்) அப்போது பிரகாசியா நின்ற வள்ளலாகிய நபிமுகம்மது சல்லல்லாகு அலைகி வசல்லமவர்களது சொப்பனத்தின்கண் ஜிபுறயீல் அலைகிஸ்ஸலா மவர்கள்வந்து இக்கானகத்திலுள்ள ஆறானது பிரவாகித்து அலைகளை இரு கரைகளிலும் வீசிக்கொண்டு பெரியமலைகளைத் தாழ்த்திடும்படி வருகின்றது. ஆதலால் நீர் உம்மைப் பொருந்திய உமது கூட்டத்துடன் எழும்புமென்று சொல்லிவிட்டுப் போயினார்கள்.

 

     730. மருப்பொலி புயமுகம் மதுதன் கண்விழித்

        தொருப்பட வெழுந்துழை யுற்ற பேர்க்கெலாம்

        விருப்பொடு மொழிந்தனர் வெள்ளம் வந்துநம்

        மிருப்பிடம் புரட்டுமீங் கெழுக வென்னவே.

8

     (இ-ள்) அவ்விதம் சொல்லிவிட்டுப் போகவே பரிமளம் பெருகிய தோள்களையுடைய நபிமுகம்மது சல்லல்லாகு அலைகிவசல்லமவர்கள் தங்களது கண்களைத் திறந்து எழும்பி ஒருமனப்படும்படி அங்கு பொருந்திய ஜனங்களெல்லாவருக்கும் இவ்வாற்றின் வழியாக ஜலமானது வந்து இவ்விடத்தில் நம்முடைய இருப்பிட முழுவதையும் புரளச் செய்யும். ஆதலால் நீங்கள் யாவரு மெழும்புங்களென்று பிரியத்துடன் சொல்லினார்கள்.

 

     731. தெரிதர வுரைத்தசொற் றேர்ந்தி யாவரும்

        விரைவினிற் சோலைவாய் விடுதி நீங்கியே

        புரவியொட் டகம்பொதி பொருளுங் கொண்டணி

        வரையினுச் சியினிடை மலிய வைகினார்.

9

     (இ-ள்) அவ்வாறு நபிமுகம்மது சல்லல்லாகு அலைகி வசல்லமவர்கள் தெரியும்படியாகச் சொல்லிய அச்சொற்களை அனைவர்களுந் தங்களது மனசில் தெளிந்து சீக்கிரத்தில் தாங்கள் தங்கியிருந்த அச்சோலையின்கண்ணுள்ள விடுதியை விட்டு மொழிந்துக் குதிரை ஒட்டகம் சுமைபொருள் முதலிய யாவையும் கொண்டுப் பெருகும்படி அவ்விடத்திலுள்ள அழகிய மலையினது சிகரத்தின்மேல் ஏறித் தங்கியிருந்தார்கள்.

 

     732. படர்தரு திரைவயி றலைத்த பைம்புனற்

        கடலிடை குளித்துச்செங் கதிர்க்க ரங்களா

        லடைபடு மிருட்குல மறுத்துப் போக்கியே

        சுடரவ னுதயமா கிரியிற் றோன்றினான்.

10