முதற்பாகம்
(இ-ள்) அப்போது
யாவர்களும் அகிலசராசரங்களையும் இன்னபடியென்று கட்டளைசெய்து நடத்தக் கூடியவனான
ஹக்குசுபுகானகுவத்த ஆலாவின் றசூல் நபிமுகம்மது சல்லல்லாகு அலைகிவசல்ல மவர்களின்
வார்த்தைகளைப் பொருந்தாத அம்மனிதன் ஆற்றின்கண் மாண்டான் இனிமையுறும்படி அச்சமில்லாது
மனத்திலுண்மை கொண்டு பொருந்தியவர்கள் பூரணமாகிய கதியினை யடைவார்களென்று சொல்லும்படியாக
அவ்வாற்றினது கரையின்கண் போயேறினார்கள்.
753. சிந்துவின்
றிரைப்பெருக் கெறியத் தீதிலா
நந்தியத்
திரிபரி யாவு நன்குற
வந்தவை
முகம்மதின் பறக்கத் தாலெனத்
தந்தம
ரொடுபுகழ்ந் தெடுத்துச் சாற்றினார்.
31
(இ-ள்)
அவ்விதம் ஏறிய யாவர்களும் சமுத்திரத்தினலைகளின் பெருக்கைப் போல அலைகளை வீச
அவ்வாற்றின்கண் குற்றமற்ற இடபம் ஒட்டகம் குதிரை முதலிய அனைத்தும் நன்மையுறும்படி நடந்து
வந்தவை நபிமுகம்மது சல்லல்லாகு அலைகிவசல்ல மவர்களின் பறக்கத்தாலென்று அவர்களைப் புகழ்ந்து
தங்களது உறவினர்களோடும் எடுத்துக் கூறினார்கள்.
|