பக்கம் எண் :

சீறாப்புராணம்

323


முதற்பாகம்
 

பொருந்தும்படி இப்பூமியின்கண் அவதரிப்பார்களென்று கேட்க; அதைக்கேட்டு அறுநூறு வருஷஞ் செல்லுமென்று சொன்னார்கள்.

 

828. அம்மொழி கேட்டுக் காண்ப தரிதென வெளியேன் சிந்தைச்

    செம்மலர் கருகத் துன்பத் தீயினிற் குளித்தோன் றன்னை

    வம்மெனத் திருத்திச் செவ்வி முகம்மதைக் காணு மட்டு

    மிம்மரச் சோலை வாயி னிருமிறை யருளான் மாதோ.

43

     (இ-ள்) நபி ஈசா அலைகிஸ்ஸலா மவர்கள் சொல்லிய அந்த வார்த்தைகளை யெளியேனாகிய யான்காதுகளினாற் கேள்வியுற்று அந்த நபிமுகம்மது சல்லல்லாகு அலைகிவசல்லமவர்களை நமது கண்களாற் பார்ப்பது அரிதாகுமென்று நினைத்து சிவந்த இருதயக் கமலமலர் தீயும்படித் துன்பமாகிய நெருப்பினில் மூழ்கிய என்னை வருவீராகவென்று அருகிலழைத்து எனது மனசைத் திருத்தும்படி செய்து இறைவனான ஹக்கு சுபுகானகுவத்த ஆலாவின் கிருபையினால் நீர் அழகிய முகம்மதென்பவரைப் பார்க்குமளவும் விருட்சங்களையுடைய இச்சோலையினிடத்தில் இரும்.

 

829. பலன்பெறு முகம்ம திங்ஙன் சாமெனும் பதியை நாடி

    நலம்பெற வருவர் நீரு நன்குறக் காண்பி ரென்னத்

    தலம்புக ழீசா கூறத் தாழ்ச்சிசெய் தடியே னெந்த

    நிலந்தனிற் காண்பே னென்ன நிகழ்த்தின நிகழ்த்தும் போதில்.

44

     (இ-ள்) மோட்சபலாபலனைப் பெறா நிற்கும் நபிமுகம்மது சல்லல்லாகு அலைகிவசல்லமவர்கள் இவ்விடத்தில் ஷாமென்னும் நகரத்தை விரும்பி நன்மையுறும்படி வருவார். அப்போது நீரும் அவரை நன்குறப் பார்ப்பீரென்று இப்பூமி முழுவதுந் துதிக்காநின்ற நபிஈசா அலைகிஸ்ஸலா மவர்கள் சொல்ல, உடனே அவர்களைப் பணிந்து அடியேனாகிய யான் அவர்களை எந்தத் தானத்தில் வைத்துப் பார்ப்பேனென்று கேட்டேன், அப்படிக் கேட்ட சமயத்தில்.

 

830. இந்நெறி வந்து முன்னா ளிறந்தவீந் தடியிற் றோன்றப்

    பன்மலர் சொரிந்து காய்த்துப் பழமுதிர்த் திடும்பா ழூற்று

    முன்னிடப் பெருகி யோடு முறைமைகண் டறிந்து நீரந்

    நன்னெறிக் குரிசிற் கென்றன் சலாமையு நவிலு மென்றார்.

45

     (இ-ள்) அவர்கள் இந்தப் பாதைவழியாக வந்த பழைய காலத்திற் பட்டுப்போன இவ்வீத்தமரக் கட்டையினது அடியிலுதையமாக, அக்கட்டையானது பல புஷ்பங்களைச் சிதறிக் காய்க்கப் பெற்றுக் கனிகளைச் சொரிந்திடும். அன்றியும், ஜலமில்லாது பாழாகிய அக்கிணற்றினது ஊற்று முன்னிடும்படி