முதற்பாகம்
இருந்துள்ளது. அவர்களினிடத்திலிருந்
துற்பத்தியாகி வந்த தலைமுறைக ளெல்லாவற்றிலும் வரிசையாக இறங்கிவந்து இனிமேலும் பிற்காலத்தில்
விரைவாக இந்தப் பெரிய பூலோகம் முழுவதையும் காக்கும்படி நபியென்று சொல்லும்வண்ணம் அவதரிக்கும்.
825.
மக்கமா நகரில்
வாழும் அப்துல்லா மதலை யாகித்
திக்கெலாம்
விளங்குஞ் செங்கோற் றீனிலை நிறுத்தி வேறு
பக்கமுன் மதங்க
ளென்னும் பகையறுத் தரிய காட்சி
மிக்கவ ராகு மற்ற
நபிகளின் மேன்மை யாமால்.
40
(இ-ள்)
மக்கமா நகரத்தில் வாசஞ்செய்யும் அப்துல்லா வென்பவரின் மகனாகி எண்டிசைகளிலும் விளங்காநிற்கும்
செங்கோலையும் தீனுல்லிஸ்லாமென்னும் மார்க்கத்தையும் இவ்வுலகத்தின்கண் நிலைபரமாக நிற்கச்
செய்து மற்ற வகுப்பினையுடைய முன்னுள்ள மார்க்கங்களென்னும் விரோதங்களனைத்தையு மரியும் அரிதான
அற்புதங்களினால் மிகுதியானவர். அன்றியும், பொருந்திய மற்ற நபிமார்களைப் பார்க்கிலும் அதிக
மேன்மையானவர்.
826.
புவியினின் முகம்ம
தென்னப் பொருந்திய பெயருண் டாகு
மவரலா னபிபின்
னில்லை யவரும்மத் தானோர்க் கெல்லாம்
பவமறுங் கதியுண் டாகும்
படைப்புணும் வானோ ரெல்லாஞ்
சுவைபெறுங் கலிமாச்
சொல்வ ரென்னவே சொல்லி னாரால்.
41
(இ-ள்)
அன்றியும், அவருக்குப் பொருந்திய இந்தப்பூமியின் கண் முகம்மதென்று நாமமுண்டாகும். அவரல்லாமல்
பின்னே நபியுமில்லை. அவரது உம்மத்தான அனைவர்களுடைய பாவமுமற்றுப் போகும். மோட்ச முண்டாகும்.
சிருஷ்டிப்பைப் பொருந்திய வானவர்களான மலக்குகளைனைவரும் இனிமைபெற்ற அவரது கலிமாவைச்
சொல்லுவார்களென்று சொன்னார்கள்.
827.
ஆரணக் குரிசிலீசா
வுரைத்தபி னவரைப் போற்றிப்
பூரண மதியம்
போலும் புகழ்முகம் மதுவென் றோதும்
பேரறி வாள ரெந்நாட்
பிறப்பரென் றிசைப்பக் கேட்டுச்
சீர்பெற வறுநூ றாண்டு
செல்லுமென் றிசைத்தா ரன்றே.
42
(இ-ள்)
வேதத்தையுடைய குரிசிலான நபிஈசா அலைகிஸ்ஸலாமவர்கள் அவ்வாறு சொல்லிய பின்னர் யான் அவர்களை
துதித்துப் பூரணச் சந்திரனைப் போலும் கீர்த்தியையுடைய நபிமுகம்மது சல்லல்லாகு அலைகி வசல்லமென்று
சொல்லும் பெரிய அறிவாளர் எக்காலம் சிறப்புப்
|