பக்கம் எண் :

சீறாப்புராணம்

321


முதற்பாகம்
பாற்றி

    யிறையவன் றூத ரேயிவ் விருநிலத் தரசர் கோவே

    குறைபடா திருந்த வெற்றிக் கொழுமணிக் குன்ற மேயா

    னறைவகேட் டருள்க வென்ன வடுத்துவிண் ணப்பஞ் செய்தான்.

37

     (இ-ள்) அவ்விதம் பொருந்திய வேதங்களனைத்தையுங் கற்றுணர்ந்த அறிவையுடையவனான அவ்விசுறாவென்னும் பண்டிதன் நீதியையுடைய நபிமுகம்மது சல்லல்லாகு அலைகிவசல்லமவர்களின் சரணங்களைத் துதித்து இறையவனான ஜல்லஜலாலஹூவத்த ஆலாவின் றசூலானவர்களே! இப்பெரிய பூலோகத்தின்கண்ணுள்ள அரசர்கட்கெல்லாம் அரசரானவர்களே! குற்றமுறாதிருந்த வெற்றியையுடைய செழிய இரத்தினாசல மானவர்களே! யான் சொல்லப்பட்டவைகளைத் தாங்கள் காதுகளினாற் கேட்டருளுங்களென்று சமீபமாய் நெருங்கி மன்றாட்டஞ் செய்தான்.

 

823. இந்நிலத் திருந்தேன் பன்னா ளிறையவன் றூத ரான

    மன்னவ ரீசா விங்ஙன் வந்தன ரவரைப் போற்றிப்

    பொன்னடி விளக்கி யின்னம் புவியிடை நபிமா ருண்டோ

    வென்னலு மென்னை நோக்கி யெடுத்தினி துரைக்க லுற்றார்.

38

     (இ-ள்) யான் அனேக காலமாக இந்தப் பூமியின் கண்ணிருந்தேன். அப்போது இவ்விடத்தில் இறையவனான அல்லாகு சுபுகானகுவத்த ஆலாவின் றசூலாகிய வேந்தர் நபிஈசா அலைகிஸ்ஸலாமவர்கள் வந்தார்கள். அவ்விதம் வரவே நான் அவர்களைத் துதித்து அவர்களின் அழகிய இருபாதங்களையும் விளக்கஞ்செய்து உங்களைத் தவிர இனிமேலும் இப்பூலோகத்தின்கண் நபிமார்கள் உண்டாய் வருவார்களோ? என்று கேட்டமாத்திரத்தில் அவர்கள் என்னைப் பார்த்து இனிமையோடும் எடுத்துச் சொல்ல ஆரம்பித்தார்கள்.

 

824. அருந்தவத் தவனே யாதி யருளொளி யவனி னீங்கா

    திருந்துள தாத மெய்யி னிடத்தவ தரித்துத் தொல்லை

    வருந்தலை முறைக ளெல்லாம் வந்தினி மேலும் பின்னாட்

    பெருந்தலம் புரக்க வல்லே நபியெனப் பிறக்கு மன்றே.

39

     (இ-ள்) அரிதான தவத்தையுடைய இஸ்றாவென்னும் பண்டிதனே யாவற்றிற்கு முதன்மையனான ஜல்லஷானுஹூவத்த ஆலாவானவன் அருளிய பழைய திருவொளியானது பூமியின்கண் மாறாது அனைவர்க்கும் முதற்பிதாவாகிய நபி ஆதமலைகிஸ்ஸலாமவர்களது சரீரத்தின்கண் தரிபட்டு