பக்கம் எண் :

சீறாப்புராணம்

346


முதற்பாகம்
 

895. கோலமொடு கூறுமொழி கொண்டுடல் களித்துச்

    சீலநபி பாதமிசை செங்கணிணை வைத்துப்

    பாலரிசி காய்கறி பழத்தொடு சுமந்தே

    சாலவு மளித்தவனு மேதரக னானான்.

39

     (இ-ள்) அவ்வாறு மைசறாவென்பவன் அழகாகச் சொல்லிய அந்த வார்த்தைகளை அம்முதியவன் தனது காதுகளிற் கொண்டு தேகமகிழ்ச்சி யடைந்து நல்ல குணத்தினையுடைய நபிமுகம்மது சல்லல்லாகு அலைகிவசல்ல மவர்களின் திருவடிகளின் மீது தனது சிவந்த இரண்டு கண்களையும் வைத்து முத்தமிட்டு மிகுந்த கனிவர்க்கங்களுடன் பால்-அரிசி-காய்-கறியாகிய இவைகளைச் சுமந்து கொண்டு வந்து கொடுத்து அவ்வியாபாரிகளின் சரக்கு முதலியவைகளுக்கு அவன் தரகனு மாயினான்.

 

896. வந்தவர்கொ ணர்ந்தபணி மாமணி சரக்கோ

    டிந்துகலை யென்றகலை யாவையு மெடுத்துச்

    சிந்தைகளி கொண்டவர் செழுங்கர மறைந்தே

    யந்தநக ரத்துவணி கர்க்கினி தளித்தார்.

40

     (இ-ள்) அவ்விதம் தரகனாகிய அம்முதியவன் திருமக்கமாநகரத்தின் கண்ணிருந்து அந்த ஷாம் நகரத்திற்கு வந்தவர்களாகிய அவ்வியாபாரிகளனைவர்களும் கொண்டு வந்த மேன்மை பொருந்திய ஆபரணங்கள் இரத்தின வர்க்கங்கள் முதலிய சரக்குகளுடன் சந்திரனது கிரணங்களைப் போன்ற வெள்ளிய வஸ்திரங்களனைத்தையும் அவன் மனமகிழ்ச்சி கொண்டெடுத்து அந்த ஷாம் நகரத்தின் கண்ணுள்ள வியாபாரிகளுக்கு இனிமையுடன் விலை தீர்த்துச் செழிய கையடித்துக் கொடுத்தான்.

 

கலிவிருத்தம்

 

897. மிக்கசெம் மணிபணி விற்று மாற்றிய

    மக்கிகண் மறுசரக் கெவையும் வாங்கித்தம்

    மொக்கலோ டின்புற வுவக்கும் போதினி

    லக்கண மொருவன்ற னமைதி கூறுவான்.

41

     (இ-ள்) அவ்வாறு மிகுதியாகிய சிவந்த இரத்தின வர்க்கங்களையும் ஆபரணத் தொகுதிகளையும் விலைக்கிரயஞ் செய்து மாற்றிய மக்கமாநகரத்தை யுடையவர்கள் மற்ற சரக்குக ளனைத்தையும் வாங்கிக் கொண்டுத் தங்களது உறவினர்களோடும் இனிமை பொருந்தும்படி மனமுவந்து இருக்கும் அந்தச் சமயத்தில் அக்கூட்டத்திலுள்ள ஒரு மனிதன் வந்துத் தனது மனதின் கண்ணுள்ள பொருத்தத்தைச் சொல்ல ஆரம்பித்தான்.