பக்கம் எண் :

சீறாப்புராணம்

345


முதற்பாகம்
 

எங்களது உயிர்போலும் முகம்மதென்னும் அபிதானத்தை யுடையவர். தகுதியுற்ற கீர்த்தியிலும் புத்தியிலும் மிகுதியானவர். அவரும் நாங்களும் எங்களது சரக்குகளோடும் உறவினர்களோடும் இந்த ஷாம்நகரத்திற்கு கச்சவடத்திற்காக வந்தோமென்று சொன்னார்கள்.

 

892. சாமிநக ரத்துநசு றானிக டமக்குண்

    மாமறையின் மிக்கனவன் வந்துமைச றாவைத்

    தேமலர் புயத்திலணி செம்மலொ டிருப்பக்

    காமருவு சார்பினிடை கண்டனன் மகிழ்ந்தான்.

36

      (இ-ள்) அப்போது அந்த ஷாம் நகரத்தின் கண்ணுள்ள நசாறாக்களுக்குள் பெருமை தங்கிய வேதத்தில் மிக்கவனான ஒரு மனிதன் சோலைகளையுற்ற அவ்விடத்தில் வந்துத் தேனைப் பொருந்திய புஷ்பமாலைகளைப் புயத்தின்கண் பூணா நிற்கும் செம்மலாகிய நபிமுகம்மது சல்லல்லாகு அலைகிவசல்ல மவர்களோடும் மைசறாவென்பவனை இருக்கும்படி பார்த்து மனமகிழ்ச்சி யடைந்தான்.

 

893. அன்னிய ரெனாதுமைச றாதனை யடுத்து

    வன்னமலர் மாலைதிகழ் மார்புற வணைத்து

    முன்னைநெடு நாளுறவ தானமுதி யோனு

    மென்னக மடைந்தினி தெழுந்தருளு மென்றான்.

37

     (இ-ள்) அவ்விதம் மகிழ்ச்சியடைந்து முன்னர் நெடுநாளாக சினேகமாயிருந்த அம்முதியவன் அன்னியரென்று சொல்லாது மைசறாவென்பவனை நெருங்கி அழகிய புஷ்பமாலை பிரகாசியா நிற்கும் தனது மார்பானது பொருந்தும்படி கட்டித் தழுவி எனது வீட்டின்கண் வந்து இருந்து விட்டுப் பின்னர் இனிமையோடும் இவ்விடத்திற்கு எழுதருளுமென்று சொன்னான்.

 

894. கோதைகதி சாவுரை மனத்திடை குறித்து

    மாதிர மெதிர்ந்துபொரு வாதபுய வள்ளல்

    பாதகம லத்துறு பணித்தொழி லிகழ்ந்தோர்

    போதினு மகன்றதிலை யென்றுரை புகன்றான்.

38

     (இ-ள்) அப்போது மைசறாவென்பவன் மலர்மாலைசூடிய கூந்தலையுடைய கதீஜாநாயகமவர்கள் கூறிய வார்த்தைகளைத் தனது மனசின்கண் குறிப்பிட்டு மலைகளும் எதிர்ந்து ஒப்பாகாத தோள்களையுடைய வள்ளலான நபிமுகம்மது சல்லல்லாகு அலைகிவசல்ல மவர்களினது பாதகமாகிய தாமரைப் புஷ்பங்களிற் பொருந்திய தொண்டு வேலைகளை நிந்தித்து யான் ஒரு சமயத்திலும் நீங்கினதேயில்லையென்று பதில்வார்த்தை சொன்னான்.