|
முதற்பாகம்
935.
பரதமா டிடமுங் கீதப்
பண்ணொலி யரங்குஞ் சீர்மை
விரதமா மறையோ
ரோதும் வேதமண் டபமுஞ் செவ்விக்
கரதலஞ் சேப்ப
வள்வார்க் கருவியா ரிடமுஞ் செல்வர்
நிரைதரு சிரம சாலை
நிறைந்தன பலவுங் கண்டார்.
35
(இ-ள்)
அன்றியும், அவர்கள் நாட்டிய மாடுகின்ற இடங்களும், இராகத்தைப் பெற்ற இசைகளைப் பயிலாநின்ற
ஒலிகளையுடைய இடங்களும், நன்னடையினைக் கொண்ட பெருமை பொருந்திய தவத்தினையுடைய மறையோர்கள்
ஓதாநிற்கும் வேத மண்டபங்களும், அழகிய கையின்புறமானது சிவக்கும்படி கூர்மை தங்கிய நீண்ட
ஆயுதத் தொழில் பயிலுவோர்களி னிடங்களும் செல்வத்தையுடைய பாலியர்கள் வரிசையாக நிற்கப்பட்ட
சிலம்பச் சாலைகளுமான அங்கு நிறைந்திருக்கப் பட்டனவாகிய பல அற்புதங்களையும் பார்த்தார்கள்.
936.
இன்னன பலவு நோக்கி
யெழில்கனிந் தொழுகிக் காந்தி
மின்னொளி மழுக்குஞ்
சோதி மெய்முகம் மதுமன் பாகத்
தன்னுயிர்த் தோழ
ரோடுந் தரகனு மைச றாவும்
பின்னுற வரவக்
காபிர் பெருந்தலைக் கடையிற் சார்ந்தார்.
36
(இ-ள்)
அந்நேரத்தில் அழகானது கனிவுற்று ஒழுகிப் பிரகாசத்தையுடைய மின்னினது ஒளியை மழுங்கச் செய்யும்
பிரபையைக் கொண்ட தேகத்தையுடைய நபிமுகம்மது சல்லல்லாகு அலைகிவசல்ல மவர்களும் இப்படிப்பட்ட
பல சிறப்புகளையும் தங்கள் கண்களினாற் பார்த்துக் கொண்டு அன்புடன் தங்களது உயிர் போன்ற
சினேகிதர்களோடும் அந்த ஷாம்நகரத்திலிருந்து தங்களை வந்து சேர்ந்துத் தங்கள் சரக்கு முதலியவைகளுக்குத்
தரகனாக அம்முதியவனும் கதீஜா நாயகமவர்களால் அனுப்பப்பட்ட மைசறாவும் தங்களது பின்னே
பொருந்தும்படி நடந்து வர, அந்தக் காபிர்களாகிய சூதர்களின் பெரிய தலைவாயிலின் கண்போய்ச்
சேர்ந்தார்கள்.
937.
அருளினி லறத்திற்
றேர்ந்த வறிவினி லெவரு மொவ்வாக்
குரிசினான் மறைக்கும்
வாய்த்த கொண்டலங் கவிகை வள்ளல்
விரிகதிர்க் கலைக
ளோடும் வெண்மதிக் காலினேகி
யிருளிடம் புகுவ
போல விவர்களில் லிடத்திற் புக்கார்.
37
(இ-ள்)
அவ்வாறு போய்ச் சேர்ந்த கிருபையினாலும் தருமத்தினாலும் தெளிவுற்ற அறிவினாலும் யாவர்களும்
ஒப்பாகாத குரிசிலாகிய தௌறாத்து - இஞ்சீல் - சபூர் - புறுக்கான் என்னும் நான்கு வேதங்களுக்கும்
சங்கையுற்ற அழகிய மேகக் குடையை யுடைய வள்ளல் நபிமுகம்மது சல்லல்லாகு அலைகி வசல்ல
|