பக்கம் எண் :

சீறாப்புராணம்

359


முதற்பாகம்

      (இ-ள்) அன்றியும், நபிமுகம்மது சல்லல்லாகு அலைகிவசல்ல மவர்கள், பெண்களானவர்கள் கரிய இரத்தினங்களைப் பதித்த கழற்சிக்காய் போலும் செய்யப்பட்ட கழங்குகளைத் தங்களது தாமரை மலர்ப் போன்ற கைகளினால் வீசி விளையாடவும், அவைகளைப் பார்த்து ஆண் வண்டுக் கூட்டங்கள் முறுக்கையுடைய கூந்தலின்கண் சூடா நிற்கும் புஷ்பங்களில் தங்கிய தங்களது பெண்வண்டுகளென்று அவற்றின் மீது சாடவும், அவற்றை அப்பெண்கள் பார்த்து புன்சிரிப்புண்டாகவும், அதனால் அவர்களின் அழகிய பற்கள் பிரகாசத்தையுடைய முத்துக்களாகத் தோற்றவுமான அதிசயங்களைக் காட்டுகின்ற வீதிகளினிடத்துள்ள சிறப்புகளையும் பார்த்தார்கள்.

 

933. மாசறு வாயி றோறும் வயங்கிய கதலி நெற்றிப்

    பாசடை துயல்வ திந்தப் பாரினிற் குபிரென் றோங்கு

    மாசற வுதித்த வள்ள லகுமதி னழகு மெய்யின்

    வீசுவ போன்று தோன்றி விளங்குதல் பலவுங் கண்டார்.

33

     (இ-ள்) அன்றியும், நபிமுகம்மது சல்லல்லாகு அலைகிவசல்ல மவர்கள் அங்குள்ள குற்றமற்ற வீட்டுகளினது வாசல்கள் தோறும் பிரகாசித்த வாழை மரங்களின் உச்சியின்கண் தங்கிய இலைகளானவை அசைவது, இப்பூமியின்கண் குபிரென்று சொல்லும்படி யோங்கா நிற்கும் குற்றமான தொழியும் வண்ணம் பிரசன்னமான வள்ளலாகிய அஹ்மதென்னும் திருநாமத்தையுடைய நபிகள் பெருமானவர்களின் அழகு பொருந்திய சரீரத்தின்கண் வீசுவதை நிகர்த்தும் விளங்குதலாகிய பல அற்புதங்களையும் பார்த்தார்கள்.

 

934. முருக்கிதழ் கரிய கூந்தன் முத்தவெண் ணகையி னார்தம்

    பெருக்கொடு திரண்டு நன்னீர் குடைதலிற் பிறங்கு மெய்யின்

    றிருக்கிளர் கலவைச் சேறு நானமும் புழுகுஞ் சேர்ந்து

    மருப்பொலி வாவி யாவும் மணங்கமழ்ந் திருப்பக் கண்டார்.

34

     (இ-ள்) அன்றியும், நபிமுகம்மது சல்லல்லாகு அலைகிவசல்ல மவர்கள் முருக்கமரத்தினது பூவையொத்த அதரத்தையும் கரிய கூந்தலையும் முத்தைப் போன்ற வெள்ளிய பற்களையுடைய பெண்கள் தங்களது பெருக்கத்துடன் கூட்டமுற்று நல்ல ஜலத்தின் கண் ஸ்நானஞ் செய்வதினால் அவர்களினது சரீரத்தில் பிரகாசியா நிற்கும் அழகானது ஓங்கப் பெற்ற கலவைச்சேறும் கஸ்தூரியும் புழுகும் அச்சலத்தின்கண் சேர்ந்து வாசனை பெருகிய அங்குள்ள தடாகங்களனைத்திலும் பரிமளமானது கமழ்ந்துக் கொண்டு இருக்கும்படி பார்த்தார்கள்.