|
முதற்பாகம்
இம்மையிலும் மறுமையிலும்
பேற்றைப் பெறுங்களென்று இப்படிப்பட்டவைகளைக் கூறி ஓசையானது அதிகரிக்கும் வண்ணம் வளைந்த
தடியையெடுத்து அழகிய முரசினை யறைந்தான்.
1103.
இந்த
மாமொழி பகர்ந்தெழு தினமுர சியம்ப
மந்த ராசல
மாளிகை மறுகுக டோறுங்
கந்த மென்மலர்த்
துகடுடைத் திருநிலங் கவினச்
சுந்த ரக்கதிர்
மடந்தையர் சுதைமெழுக் கிடுவார்.
7
(இ-ள்) அவ்வாறு அவன் பெருமை தங்கிய இந்த
வார்த்தைகளைச் சொல்லி ஏழு நாள் வரைக்கும் முரசடிக்கவே, மந்திரகிரியையொத்த மாளிகைகளையுடைய
எல்லா வீதிகளிலும், வாசனை யமைந்த மெல்லிய புஷ்பங்களினது மகரந்தங்களைச் சுத்தி செய்து பெரிய
இந்தப் பூலோகமானது சிறக்கும்படி அழகிய பிரகாசத்தைக் கொண்ட திருமேனியையுடைய பெண்கள் சுண்ணச்
சாந்து பூசுவார்கள்.
1104.
இடன றத்திருக்
காவண நிரைநிரைத் திடுவார்
நடலை யுள்ளற
மகரதோ ரணம்பல நடுவார்
விடுசுடர்ப்பட மெடுத்துயர்
வெளியடைத் திடுவார்
குடுமி மாடத்தி
னணியணிக் கொடித்திர ணடுவார்.
8
(இ-ள்) அன்றியும்,
எங்குமிடமின்றி அழகிய பந்தர்களை வரிசையாக ஒழுங்கு படுத்துவார்கள். வஞ்சகமானது மனதின்கண்
அற்றுப் போகும் வண்ணம் பலவித மகர தோரணங்களை நட்டுவார்கள். நானாபக்கங்களிலும் பிரகாசத்தை
விடா நிற்கும் படங்களையெடுத்து உயர்ந்த வெளிகளை யடைத்திடுவார்கள். மாடங்களினது சிகரங்களில்
வரிசைவரிசையாய்க் கொடிகளின் திரள்களை நாட்டுவார்கள்.
1105.
இடைப ழக்குலை
யொடுகத லிகணிரைத் திடுவார்
மடல்வி ரிந்தபூங்
கமுகினை நிறுவிவைத் திடுவார்
கடிந றாவொழு கிடக்கொடிக்
கரும்புக ணடுவார்
துடர ணிக்குலைத்
தெங்கிள நீர்கடூக் கிடுவார்.
9
(இ-ள்) இடைகளிற் பழக்குலைகளுடன் வாழை
மரங்களை வரிசைப்படுத்துவார்கள். மடல்கள் விரியப்பெற்ற அழகிய கமுக மரத்தினை நிறுத்தி வைப்பார்கள்.
வாசனையையுடைய தேனானது ஒழுகும் வண்ணம் நீண்ட கரும்புகளை நட்டுவார்கள். ஒன்றோடொன்று தொடரப்பெற்ற
அலங்காரத்தைக் கொண்ட குலைகளையுடைய தெங்கின் இளநீர்களைத் தூக்குவார்கள்.
|