பக்கம் எண் :

சீறாப்புராணம்

477


முதற்பாகம்
 

நுபுவ்வத்துக் காண்டம்

 

நபிப்பட்டம் பெற்ற படலம்

 

எழுசீர்க்கழி நெடிலடியாசிரிய விருத்தம்

 

1241. சோதியா யெவைக்கு முள்ளுறைப் பொருளாய்த்

          தோற்றமு மாற்றமுந் தோன்றா

     வாதிதன் பருமான் கொண்டினி தோங்கி

          யமரிழிந் தமரருக் கரசன்

     மேதினி புகுந்து முகம்மது தமக்கு

          விளங்கிய நபியெனும் பட்டங்

     கோதறக் கொடுப்பத் தீன்பயிர் விளைத்த

          கூறெலாம் விரித்தெடுத் துரைப்பாம்.

1

      (இ-ள்) பிரகாசமாகவும் யாவற்றிற்கும் உள்ளே தங்கா நின்ற பொருளாகவும் பிறப்பும் இறப்பும் உண்டாகாத ஆதியான அல்லாகு சுபுகானகுவத்த ஆலாவின் கட்டளை கொண்டு தேவர்களாகிய மலாயிக்கத்துமார்களுக்கு அதிபரான ஜிபுறீல் அலைகிஸ்ஸலா மவர்கள் இனிதாக வோங்கி தேவலோகத்தை விட்டும் இறங்கி இப்பூலோகத்தின்கண் நுழைந்து ஹபீபு றப்பில் ஆலமீன் நபிமுகம்மது முஸ்தபாறசூல் சல்லல்லாகு அலைகிவசல்ல மவர்களுக்குக் குற்றமற விளங்கிய நபியென்று சொல்லும் பட்டமருள, அவர்கள் இப்பூலோகத்தின்கண் தீனென்னும் பயிரை விளையச் செய்த காரணங்களெல்லாவற்றையும் விரைவாய் எடுத்து யாம் சொல்லுவாம்.

1

1242. புள்ளிவண் டருட்ட முண்டிசை பயிலும்

         பொழிறிதழ் மக்கமா புரத்திற்

     றெள்ளிய குறைசிக் குலத்தினி லுதித்த

         செம்மலுக் குறைந்தபே ராண்டு