முதற்பாகம்
1240.
பொன்ன கத்தினுந் தீவினும்
பூவினும் பொருவா
மின்னி லங்கிய மக்கமா
நகரினில் வியப்பா
மன்னர் மன்னவர் மதித்திடச்
சிறந்தககு பாவை
முன்னி ருந்ததின் மும்மடங்
கெனும்படி முடித்தார்.
25
(இ-ள்) அவ்விதம்
நிறுத்தி சொர்க்கலோகத்திலும் தீவுகளிலும் பூலோகத்திலும் ஒப்பாகாத பிரகாசமானது இலங்கப் பெற்ற
திருமக்கமாநகரத்தில் ஆச்சரியமாய் இராஜாதி இராஜர்களும் மதிக்கும் வண்ணம் சிறப்புற்ற அந்தக்
கஃபத்துல்லாவை முன்னரிருந்ததிலும் மூன்று பங்கு அதிகமென்று சொல்லும்படி செய்து முடித்தார்கள்.
|