பக்கம் எண் :

சீறாப்புராணம்

480


முதற்பாகம்
 

சல்லல்லாகு அலைகிவசல்ல மவர்கள் வரிசையாகிய கிரணங்கள் தவழா நிற்கும் ஹிறாமலையின்கண் நன்மையுறும்படி ஏகமாய் உலாவித் தங்களின் மனமானது பொருந்தும் வண்ணம் நாலுநாள் இரண்டுநாள் தங்கியிருந்து விற்போலும் வளைந்த சிறிய நெற்றியை யுடைய கதீஜாநாயகியவர்கள் தங்கியிருக்கும் தெய்வீகம் பொருந்திய வீட்டின்கண் வருவார்கள்.

 

1247. வரிசைக்குங் கதிக்கு முதற்றிருத் தலமாய்

          மதித்திட வருங்கிறா மலையி

     லுருசிக்குங் கனிவாய் மடமயிற் கதீசா

          வுடன்வர முகம்மது மெழுந்து

     தெரிசிக்கப் பொருந்து மமரர்தம் முருவுந்

          தெரிந்திடா தவணிடை யிருந்து

     பரிசுத்த மனைய குயிலொடுந் தாமும்

           பகற்பொழு தாற்றியே வருவார்.

7

      (இ-ள்) அன்றியும், சங்கைக்கும் மோட்சத்திற்கும் ஆதியான தெய்வீகம் பொருந்திய இடமாய் யாவர்களும் மதிப்பிடும்படி வந்த ஹிறாமலையில் இனித்திடும் இனிப்பைக் கொண்ட கனிபோலும் வாயை யுடைய இளமயிலாகிய கதீஜாநாயகி யவர்கள் தங்களோடு வரும் வண்ணம் நாயகம் நபிமுகம்மது சல்லல்லாகு அலைகிவசல்ல மவர்கள் எழும்பிப் பார்ப்பதற்காகப் பொருந்தும் தேவர்களுடைய சொரூபமும் தோற்றாது அவ்விடத்தின் கண்ணே தங்கியிருந்து பகற்காலத்தைக் கழித்துப் பரிசுத்தத்தைப் போன்ற குயிலான அக்கதீஜா நாயகி யவர்களுடன் தாங்களும் வீட்டிற்குத் திரும்பி வருவார்கள்.

 

1248. மக்கநன் னகருந் தெருத்தலை மதிளும்

         வழியிடைக் கிடந்தகல் லனைத்தும்

     புக்குநல் லிடத்திற் றெரிந்தவை யெவையும்

         புகழொடு முகம்மது தமக்குத்

     தக்கநற் பொருளா யுறுசலா முரைக்குந்

         தனித்தொனி யிருசெவி தழைப்ப

     மிக்கமெய்ப் புதுமை தனையுணர்ந் துணர்ந்து

         மிகக்களித் ததிசயித் திருப்பார்.

8

      (இ-ள்) அன்றியும், நாயகம் நபிமுகம்மது சல்லல்லாகு அலைகிவசல்ல மவர்களுக்கு நன்மை பொருந்திய திருமக்கமா நகரமும் வீதிகளினிடத்துள்ள மதில்களும் பாதையின்கண் கிடக்கப் பெற்ற கற்கள் முழுவதும் அவர்கள் போகின்ற இடத்தில் அவர்களைப் பார்த்த மற்றும் எல்லா வஸ்துக்களும் கீர்த்தியுடன் தகுந்த நல்ல பொருளாக ஒப்பற்ற ஓசையினால் இரு காதுகளும்