பக்கம் எண் :

சீறாப்புராணம்

481


முதற்பாகம்
 

செழிக்கும் வண்ணம் பொருந்திய சலாம் சொல்லும் அதிகரித்த உண்மையான அவ்வாச்சரியத்தைத் தங்களின் மனசின்கண் ஆலோசித்து மிகவும் சந்தோஷித்து ஆச்சரியமுற்றிருப்பார்கள்.

 

1249. முருகவிழ் புயவள் ளலுக்குறும் வருட

         முப்பதிற் றொன்பதின் மேலாய்த்

     தெரிதருந் திங்க ளாறுஞ்சென் றதற்பின்

          றினந்தொறும் புதுமைய தாக

     மருமலர்ச் செழுந்தார்க் கனங்குழற் கதீசா

          வெனுமயின் மணமனை யிடத்தி

     லிருவிழி துயில மண்ணிடைத் தோன்றா

           தெழில்பெறக் கனவுகள் காண்பார்.

9

      (இ-ள்) அன்றியும், தேனானது அவிழ்கின்ற மலர்மாலை யணிந்த தோள்களையுடைய வள்ளலான நாயகம் நபிமுகம்மது சல்லல்லாகு அலைகிவசல்ல மவர்களுக்குப் பொருந்திய வயசானது முப்பத்தொன்பதின் மேலாய்க் காணப்படும் மாதங்களும் ஆறுசென்றதின் பிற்பாடு பிரதிதினமும் ஆச்சரியமாக வாசனை பொருந்திய செழிய புஷ்பமாலையமைந்த மேகம் போலுங் கூந்தலை யுடைய கதீஜாவென்று சொல்லும் மயிலானவர்களினது பரிமளத்தை யுடைய வீட்டின்கண் இரண்டு கண்களும் நித்திரை செய்யவே, இவ்வுலகத்தில் தோற்றாத அழகு பெறும் வண்ணம் சொப்பனங்கள் காணுவார்கள்.

 

1250. வெண்டிரைக் கடலி லமுதமும் பொருவா

          வியனுறு மெல்லிதழ்க் கதீசா

     கொண்டுறு மயலு ளுயிரினு முயிராய்க்

           குலவிய முகம்மது நயினார்

     வண்டுறை மலர்ப்பஞ் சணைமிசைப் பொருந்தி

           மறுவிலா தொளிர்மதி முகத்துக்

     கண்டுயில் பொழுதிற் கனவுக ளனைத்துங்

           கண்டது கண்டதாய்ப் பலிக்கும்.

10

      (இ-ள்) அவ்வாறு வெள்ளிய அலைகளை யுடைய சமுத்திரத்தின் அமிர்தமும் ஒப்பாகாத அதிசயம் பொருந்திய மெல்லிய அதரங்களைப் பெற்ற கதீஜாநாயகி யவர்கள் தங்களின் மனசிற்கொண்டு அதிகரியா நிற்கும் ஆசையினால் சரீரத்தினகம் பொருந்தும் ஜீவனிலும் ஜீவனாய்க் குலவப் பெற்ற ஆண்டவர்களான நபிமுகம்மது சல்லல்லாகு அலைகிவசல்ல மவர்கள் தேனீக்கள் தங்காநின்ற புஷ்பங்களினாலான பஞ்சணையின்மீது பொருந்திக் குற்றமில்லாது பிரகாசிக்கின்ற சந்திரன் போன்ற முகத்தினது கண்கள் நித்திரை செய்யும் காலத்தில்