பக்கம் எண் :

சீறாப்புராணம்

510


முதற்பாகம்
 

1334. மறையார் நபிக்கி ரகசியத்தின்

          வணக்கம் படித்துக் கொடுத்துமணிச்

     சிறையா ரமரர்க் கரசர்முகி

          றீண்டா விசும்பி னடைந்ததற்பி

     னறையார் கூந்தற் கதீசாவை

          நண்ணி யுலுவும் வணக்கமுமுன்

     முறையா யுரைப்ப வுரைத்தபடி

          முடித்தார் கனகக் கொடித்தாயே.

39

      (இ-ள்) இரத்தினச் சிறகுகளை யுடையவர்களான அமரேசுவரர் ஜபுறயீல் அலைகிஸ்ஸலா மவர்கள் புறுக்கானுல் அலீமென்னும் வேதத்தை யுடைய நபிமுகம்மது சல்லல்லாகு அலைகிவசல்ல மவர்களுக்கு இரகசியமாய்த் தொழுகையைக் கற்பித்து மேகமண்டலத்தைத் தொட்டு ஆகாயலோகத்தின்கண் போய்ச் சேர்ந்த பிற்பாடு நபிகள் பெருமானவர்கள் வாசனை மிகுந்த கூந்தலையுடைய கதீஜா றலியல்லாகு அன்ஹா அவர்களை நெருங்கி உலுவையும் தொழுகையையும் முன்னர் ஜபுறயீல் அலைகிஸ்ஸலாமவர்கள் தங்களுக்குக் கற்பித்த ஒழுங்காய்ச் சொல்ல, பொற்கொடிபோலும் உலகமாதாவாகிய அக்கதீஜா றலியல்லாகு அன்ஹா அவர்களும் சொன்ன வண்ணம் செய்து நிறைவேற்றினார்கள்.

 

1335. மாரி யருந்திப் பண்மிழற்றி

         வரிவண் டுறங்கு மலர்க்கூந்த

     னாரி சுருதி முறைவணங்கி

         நளின மனங்கூர்ந் திருந்ததற்பின்

     மூரித் திறலொண் சிலைக்கையபூ

         பக்கர் முதன்மற் றுள்ளோரு

     மேருப் புயத்தார் பெருவரத்தார்

         விரைத்தா மரைத்தாட் புகழ்ந்தடுத்தார்.

40

      (இ-ள்) இரேகைகளமைந்த வண்டுகள் தேனையுண்டு இசை பயின்று நித்திரை செய்யா நிற்கும் புஷ்பமாலை தங்கிய கூந்தலையுடைய கதீஜாறலியல்லாகு அன்ஹா அவர்கள் அவ்வாறு வேதத்தினது ஒழுங்காய்த் தொழுது இனிமையுடைய மனமானது கூரப் பெற்று இருந்ததன் பின்னர், பெருமை பொருந்திய வலிமையினது ஒள்ளிய கோதண்டம் தாங்கிய கையையுடைய அபூபக்கர் சித்தீகு றலியல்லாகு அன்கு முதல் மற்றும் தீனுல் இஸ்லாத்திலான யாவர்களும் மகாமேரு பருவதத்தைப் போன்ற தோள்களை யுடையவர்களான பெரிய வரத்தைக் கொண்ட நபிமுகம்மது சல்லல்லாகு அலைகிவசல்ல மவர்களின்