முதற்பாகம்
1499.
அங்கவன் றனையன் மைந்த னகுமதை வாய்க்கொள் ளாத
பங்கமுற்
றுறுஞ்சொற் கேற்பத் தண்டனை படுத்தல் செய்தா
னங்குலத்
தவர்க்குக் கோப நடத்துதல் பழுதென் றோதி
வெங்கொலை
மனத்து ளாக்கி விளைபகை தவிர்த்து நின்றான்.
160
(இ-ள்) அந்த
ஹம்சா வென்பவனின் தமையனான அப்துல்லாவின் புதல்வனாகிய அஹ்மதென்னும் நாமத்தையுடைய
முகம்மதென்பவனை அவ்விடத்தில் நான் வாய்கொள்ளாத ஈனமுற்றுப் பொருந்திய வார்த்தைகளைப்
பேசினதற்குத் தகுதியாக என்னை அவன் ஆக்கினைப் படுத்தினான். ஆதலால் நமது
கூட்டத்தார்களுக்குக் கோபத்தைச் செலுத்துவது குற்றமென்று சொல்லி வெவ்விய கொலைத் தொழிலை
மனசினகம் ஆகும் வண்ணம் செய்து உண்டாகா நிற்கும் விரோதத்தை யொழித்து நின்றான்.
1500.
அடலரி யம்சா கோபித் தபூசக லவையை நீந்திக்
கடிமலர் மரவத்
திண்டோட் கனவரை கதித்து வீங்க
வுரைதிரை யமுத
மொவ்வா தோதிய கலிமா வேந்த
ரிடைவிடா
திருப்பத் தோன்று மெழின்முகம் மதுவைச் சார்ந்தார்.
161
(இ-ள்)
அப்போது வலிமையைக் கொண்ட சிங்கத்தை நிகர்த்த ஹம்சா அவர்கள் கோபமுற்று அந்த
அபூஜகிலினது கூட்டத்தை விட்டும் தாண்டிப் பரிமளமமைந்த குங்குமப் புஷ்பத்திலான மாலைகளையணிந்த
தங்களின் திண்ணிய புயங்களாகிய மகாமேரு பருவதங்கள் அதிகமாய்ப் பூரிக்கும் வண்ணம் அலைகளை
யுடைய சமுத்திரத்தின் கண்ணுள்ள தேவாமுதமும் நிகராகாது சொல்லா நிற்கும் கலிமாவையுடைய
அரசர்கள் பக்கம் விட்டும் நீங்காது இருக்கும்படி பிரகாசியா நிற்கும் அழகிய நாயகம்
நபிமுகம்மது சல்லல்லாகு அலைகிவசல்ல மவர்களிடத்தில் வந்து சேர்ந்தார்கள்.
1501.
வள்ளலென் றுதவுஞ்
செவ்வி முகம்மதின் மதுர வாக்கின்
விள்ளரு மறையின்
றீஞ்சொல் விடுத்தெடுத் துரைப்பத் தேறி
யுள்ளமு முடலும்
பூரித் துருசிக்கு மமுதின் மிக்காய்த்
தெள்ளிய கலிமா
வோதி தீனிலைக் குரிய ரானார்.
162
(இ-ள்)
அவ்வாறு வந்து சேர்ந்த ஹம்சா அவர்கள் வள்ளலென்று கொடா நிற்கும் அழகிய நாயகம் நபிமுகம்மது
சல்லல்லாகு அலைகிவசல்ல மவர்களின் இனிய வாக்கினால் சொல்லுதற்கரிய புறுக்கானுல்
அலீமென்னும் வேதத்தினது மதுரமாகிய வார்த்தைகளை எடுத்துப் பிரித்துச் சொல்லத் தங்களின்
மனசின்கண் தெளிந்து மனமும் சரீரமும் பூரிக்கப் பெற்று இனியாநின்ற
|