பக்கம் எண் :

சீறாப்புராணம்

569


முதற்பாகம்
 

அமுதத்தைப் பார்க்கிலும் அதிகமாய்த் தெளிவுற்ற ழுலாயிலாஹ இல்லல்லாகு முகம்மதுர் ரசூலுல்லாஹிழு யென்னும் கலிமாவைச் சொல்லித் தீனுல்இஸ்லா மென்னும் மார்க்க நிலைமைக்குச் சொந்தக்கார ராயினார்கள்.

 

1502. அறிவுறு மம்சா தீனி லாயின ரென்னு மாற்ற

     மறுவுறை குபிரர் கேட்டு மனத்தினிற் றுன்ப முற்றா

     ரிறையவன் றூதர் செவ்வி யியனபி கலிமா வோதுந்

     திறல்கெழும் வேந்த ரியாருஞ் சிந்தையிற் செல்வம் பெற்றார்.

163

      (இ-ள்) அறிவைப் பொருந்திய ஹம்சா றலியல்லாகு அன்கு அவர்கள் அவ்வாறு தீனுல் இஸ்லாமென்னும் மார்க்கத்தி லாயினார்களென்று சொல்லும் சமாச்சாரத்தைக் குற்றமானது தங்கப் பெற்ற அந்தக் காபிர்கள் கேள்வியுற்று மனசின்கண் வருத்த மடைந்தார்கள். யாவற்றிற்கும் இறைவனான ஜல்லஜலாலகுவத்த ஆலாவின் தூதராகிய அழகிய ஒழுங்கைக் கொண்ட நாயகம் நபிமுகம்மது முஸ்தபா றசூல் சல்லல்லாகு அலைகிவசல்ல மவர்களின் கலிமாவைச் சொல்லிய வலிமையானது நிறையப் பெற்ற அரசர்களான முஸ்லிம்க ளெல்லாவரும் மனசின்கண் இன்பத்தைக் கொண்டார்கள்.