பக்கம் எண் :

சீறாப்புராணம்

574


முதற்பாகம்
 

காளை மாட்டின் வடிவமாகி இமையா நிற்கும் நொடிப் பொழுதினகம் ஆகாயத்தி லிருந்து இப்பூலோகத்தின்கண் இறங்கினார்.

 

1516. காற்றி ரட்சியுங் கவையடிக் குளம்பின்கட் டுரமு

     மேற்றி ருக்கற வளைந்தெழு மருப்பினில் வியப்புங்

     கூற்று றாதுருள் கழத்தடித் தோனெளிக் குழைவு

     நாற்றி மேற்றுளை நாசியிற் றவழ்தரு நாவும்.

14

      (இ-ள்) அவ்வாறு இறங்கிய காற்களினது திரட்சியையும் பிளவுற்ற பாதமாகிய குளம்புகளின் உறுதியான வலிமையையும் மேலே திருக்கில்லாது வளைந்து எழா நிற்கும் கொம்புகளில் ஆச்சரியத்தையும் கூற்றுறாது உருண்ட கழுத்தடியின் தோலினது நெளிவைக் கொண்ட வளைவையும் நாற்றி மேல் துவாரத்தைப் பெற்ற மூக்கில் தவழ்கின்ற நாவையுமுடைய.

 

1517. அசைத்த வாலெடுத் திருபுடை புடைத்துமண் ணதிர

     விசைத்த கால்களி லுலவித்தண் பசியபுன் மேய்ந்து

     பசித்த வள்ளுகிர் நிகரும றேகிய பாதைக்

     கிசைத்த டுத்தது வானகத் துருமெனு மிடபம்.

15

      (இ-ள்) ஆகாயத்தின் கண்ணுண்டாகும் இடியென்று சொல்லா நிற்கும் அந்தக் காளை மாடானது அசைக்கின்ற தனது வாலைத் தூக்கி இரண்டு பக்கங்களிலும் மண்ணானது அதிரும் வண்ணம் அடித்து வேகமுற்ற காற்களினால் உலாவிக் குளிர்ச்சி தங்கிய பசிய புற்களைச் சாப்பிட்டு பசியைக் கொண்ட புலியைப் போலும் உமறென்பவர் செல்லுகின்ற பாதையைப் பொருந்தி நெருங்கினது.

 

1518. உலங்கொ டிண்டிறற் புயனும றெனுமொரு சீயங்

     கலன்கள் வில்லிட வெயர்ப்பொடும் விழிக்கனல் கதுவத்

     துலங்கு செவ்விதழ் வெள்ளெயி றதுங்கிடச் சுடர்வா

     ளிலங்கி டத்தனி வருவது நோக்கிய திடபம்.

16

      (இ-ள்) அவ்வாறு நெருங்கிய அந்தக் காளை மாடானது திரண்ட கல்லைப் போலும் திண்ணிய வலிமையைக் கொண்ட தோள்களை யுடையவரான உமறென்று சொல்லும் ஒப்பற்ற சிங்கமானவர் ஆபரணங்கள் நானா பக்கங்களிலும் பிரகாசத்தை வீசவும், கோபத்துடன் இரண்டு கண்களிலு முள்ள அக்கினியானது அதிகமாய்ப் பற்றவும், பிரபையை யுடைய வாளாயுதம் மின்னவும், ஏகமாக நடந்து வருவதைக் கண்களினாற் பார்த்தது.

 

1519. கவ்வை யங்கடற் புவியினின் முகம்மதைக் கசப்பத்

     தெவ்வ ரில்லென மனத்திடைக் களிப்பொடுஞ் சிரித்துக்

     குவ்வ திர்ந்திட வுமறுகத் தாபெனக் கூவி

     யெவ்வு ழித்தனி செல்குற்றீர் நீவிரென் றிசைத்த.

17