முதற்பாகம்
(இ-ள்)
அவ்விதம் பார்த்த அந்தக் காளை மாடானது ஓசையையுடைய அழகிய சமுத்திரத்தைக் கொண்ட
இப்பூலோகத்தின்கண் நாயகம் நபிமுகம்மது சல்லல்லாகு அலைகிவசல்ல மவர்களை வருத்தும் வண்ணம்
சத்துராகிகளில்லரென்று சொல்லி மனசின்கண் சந்தோஷத்தோடும் நகைத்துப் பூமியானது நடுங்கும்
வண்ணம் உமறு கத்தாபே! என்று கூப்பிட்டு நீவிர் ஏகமாக எவ்விடத்திற்குச் செல்லுகின்றீரென்று
கேட்டது.
1520.
உரைத்த
சொற்செவி புகவுழை யெவரென நோக்கித்
தரைத்த லத்திவ
ணொருவரு மிலரெனச் சார
விரைத்த
லோடுமவ் வுரைபகர்ந் துமறென விசைப்பத்
திருத்தி
நாற்றிசை யெங்கணு நோக்கினர் செம்மல்.
18
(இ-ள்)
பெருமையிற் சிறந்தவரான உமறு கத்தாபென்பவர் அக்காளைமாடு சொல்லிய வார்த்தையானது தமது
காதுகளில் நுழையவே பக்கத்தில் யாவர்களென்று பார்த்து இப்பூமியினிடத்தில் ஒருவரு மில்லரென்று
சொல்லித் தமது திசையை நோக்கிச் சாரவும், அம்மாடானது ஓசையோடும் அந்த வார்த்தைகளையே
சொல்லி மறுத்தும் உமறென்று கூப்பிடச் செவ்வையாக நான்கு திக்குகளிலுமுள்ள எல்லாவிடங்களிலும்
பார்த்தார்.
1521.
கூறு மாந்தர்க ளிலையெனப் பினும்வழிக் குறுக
வேறு கூவிய
தெவரென மறுத்துமுள் ளிடைந்து
வேறு மாக்களைக்
காண்கிலர் விடையினை நோக்கித்
தேறு மிவ்வுரை
பகர்ந்ததிங் கெவரெனத் திகைத்தார்.
19
(இ-ள்)
அவ்விதம் பார்த்து வாய் திறந்து பேசும் மனிதர்கள் ஒருவரு மில்லரென்று சொல்லிப் பின்னரும்
தமது பாதையிற் பொருந்த மறுத்தும் கூப்பிட்டது. அப்போது அந்த உமறென்பவர் இவ்விதம்
கூப்பிடுவோர் யாவரென்று தமது மனமானது வசக்கேடடைந்து தம்மையல்லாமல் மற்ற மனுஷியர்களை அங்கு
காணாதவராய் அந்தக் காளை மாட்டைப் பார்த்துத் தெளிந்த இந்த வார்த்தைகளைச் சொன்னது
இங்கே யாவரென்று சொல்லித் திகைப்படைந்தார்.
1522.
பருந்தெ
ழுங்கதிர் வேலும றெழின்முகம் பார்த்து
வருந்தி லாதுமைக்
கூவிய தியானென மதித்துப்
பொருந்து
மில்லிடந் தவிர்ந்தெவண் புகுவது புகழோய்
விரிந்த
வாய்திறந் தறையுமென் றுரைத்தது விடையே.
20
(இ-ள்)
அப்போது அந்தக் காளை மாடானது பருந்துகள் எழா நிற்கும் பிரகாசத்தைக் கொண்ட வேலாயுதத்தை
யுடைய
|