பக்கம் எண் :

சீறாப்புராணம்

576


முதற்பாகம்
 

உமறென்பவரின் அழகிய முகத்தைப் பார்த்து உம்மை மனசின்கண் கருதி வருந்தாது கூப்பிட்டது நான்தானென்று சொல்லிக் கீர்த்தியை யுடைய உமறு கத்தாபே! நீவிர் பொருந்தும் வீட்டை விட்டும் விலகி எவ்விடத்திற்குச் செல்லுகின்றீர்? அச்சமாச்சாரத்தை உமது விரிவுற்ற வாயைத் திறந்து என்னிடத்தில் சொல்லுமென்று கேட்டது.

 

1523. ஞான மாமறை முன்னவர் மொழிநட வாம

     லீன மின்றிய தேவத மனைத்தையு மிகழ்ந்து

     மானி லத்தினிற் புதிதொரு மார்க்கமுண் டாக்கித்

     தீனெ னும்பெயர் நிறுத்தித்தன் னுரைப்படி திருத்தி.

21

      (இ-ள்) அவ்விதம் கேட்கவே மகத்தாகிய அறிவைக் கொண்ட வேதங்களினது முன்னோர்களின் வார்த்தைக ளானவை நடைபெறாமல் இழிவற்ற நமது தேவதங்க ளெல்லாவற்றையும் நிந்தித்துப் பெருமை தங்கிய இந்தப் பூலோகத்தில் நூதனமாக ஒரு மார்க்கத்தை யுண்டுபடுத்தி அதற்குத் தீனென்று சொல்லும் நாமத்தை நாட்டித் தனது சொல்லின் வண்ணம் யாவர்களையும் திருந்தச் செய்து.

 

1524. இனமெ லாம்வெறுத் திடப்பகை யெனத்தலை யெடுத்துத்

     துனிவி ளைத்திடு முகம்மதி னுடறுணி துணித்துச்

     சினம கற்றுதற் கெழுந்தன னெனத்தெளிந் தெதிராய்

     வினவு மேறுடன் மொழிந்தன ருமரெனும் வீரர்.

22

      (இ-ள்) பந்துக்க ளெல்லாவரும் விரோதிக்கும் வண்ணம் விரோதியைப் போலத் தலையெடுத்துத் துன்பத்தை யுண்டாக்கிடும் முகம்மது என்பவனின் சரீரத்தைத் துண்டாக வெட்டி எங்களுடைய கோபத்தை நீக்குவதற்காய் எழும்பினேனென்று தேறுதலுற்றுத் தமக்கு எதிராகக் கேட்கும் காளை மாட்டுடன் உமறென்று சொல்லும் வீரத்தை யுடையவர் சொன்னார்.

 

1525. ஆதி தூதரை வெறுத்துல கடங்கலுந் திரண்டு

     வேத னைத்தொழில் விளைக்கினு மவர்வயின் விளையா

     தேத முற்றதும் மனவலி யிடரினைத் தவிர்ந்து

     போதல் வேண்டுமா னுமக்கென மறுத்துரை புகலும்.

23

      (இ-ள்) அவர் அவ்விதம் சொல்லவே, அந்தக் காளை மாடானது இந்தப் பூமியின் கண்ணுள்ள ஜனங்க ளெல்லாவரும் ஒன்றுசேர்ந்து யாவற்றிற்கும் முதன்மையான ஜல்லஜலாலகு வத்த ஆலாவின் றசூலாகிய நாயகம் நபிமுகம்மது சல்லல்லாகு அலைகிவசல்ல மவர்களை விரோதித்து துன்பத்தை யுடைய