பக்கம் எண் :

சீறாப்புராணம்

594


முதற்பாகம்
 

தேரும் வண்ணம் படித்துத் தெளிந்து இந்தத் தகுதிக்குச் சொந்தமானவர் யாவர்? இஃது யாருடைய வார்த்தைகளென்று சொல்லித் தனது புத்தியினகம் சந்தோஷித்துத் தேர்ந்து ஒப்பற்ற விருப்பமுற்றார்.

 

1578. மறைமொழிப் பொருளைத் தேர்ந்து மானுடர் மொழியீ தன்றென்

     றிறையவன் மொழியே யென்ன விதயத்தி லிருத்தி வேத

     நிறைநிலை மனத்த ராகி நினைத்தவஞ் சகத்தைப் போக்கிக்

     குறைபடுங் குபிரைச் சூழ்ந்த குலத்தொடும் வெறுத்து நின்றார்.

76

      (இ-ள்) அவ்விதம் விருப்பமுற்ற உமறுகத்தா பென்பவர் அந்த வேதவாசகத்தின் அர்த்தத்தை மனசின்கண் தெளிந்து இஃது மனுஷியர்களின் வார்த்தைகளல்ல, என்னுடைய இறைவனான ஜல்லஜலாலகுவத்த ஆலாவின் வார்த்தைகளே யென்று சொல்லி இருதயத்தின்கண் இருக்கும்படி செய்து வேதமானது நிறையப் பெற்ற நிலைமையைக் கொண்ட உள்ளத்தையுடையவராய் தாம் முன்னர் எண்ணிய வஞ்சகத்தை யொழித்துக் குறைவைப் பொருந்திய அந்தக் காபிர்களை வளைந்த கூட்டத்தோடும் விரோதித்து நின்றார்.

 

1579. வழிபிழைத் திருளின் முட்சார் வனத்திடைக் கிடந்துள் ளாவி

     கழிபட விடைந்தெற் றோன்றுங் காலைநன் னெறிபெற் றோர்போ

     லழிதருங் குபிரை நீக்கி யகுமது தீனை நோக்கிப்

     பொழிகதிர் வதனச் செவ்விப் புரவல ருமறு நின்றார்.

77

      (இ-ள்) அன்றியும், செல்லும் பாதையில் தவறி அந்தகாரத்தில் முட்கள் பொருந்திய காட்டின்கண் கிடந்து சரீரத்தினுள் தங்கிய ஜீவனானது கழியும் வண்ணம் வசக்கேடாகிச் சூரியனானவன் உதயமாகும் பொழுது நல்ல பாதையை யடைந்தவர்களைப் போலக் கிரணங்களைச் சிந்துகின்ற அழகிய முகத்தையுடைய அரசரான உமறுகத்தா பென்பவர் கேட்டைத் தரா நிற்கும் குபிரென்னும் மார்க்கத்தை யொழித்து அஹ்மதென்னும் திருநாமத்தையுடைய நாயகம் நபிமுகம்மது சல்லல்லாகு அலைகிவசல்ல மவர்களின் தீனுல் இஸ்லாமென்னும் மார்க்கத்தைக் கவனித்து நின்றார்.

 

1580. ஓதுநன் னெறிக்கு நேர்பட் டிசைந்தன ருமறென் றெண்ணிக்

     காதர மகற்றி யில்லுட் கரந்தது தவிர்ந்து கப்பாப்

     தாதவி ழலங்கற் கோதைத் தையலுஞ் சகீது முற்ற

     வேதிகை யிடத்திற் புக்கி விளைவது காண்ப நின்றார்

78