பக்கம் எண் :

சீறாப்புராணம்

6


முதற்பாகம்
 

பதவுரை 

      கடலினை - சமுத்திரத்தையும், மலையை - பருவதத்தையும், கதிர்மதி உடுவை - சூரிய சந்திர நட்சத்திரங்களையும், ககனம் மற்று - ஆகாயத்தையும், அறுஷூஒடு குறுசையும் - அறுசுடன் குறுசையும், புடவியை - பூமியையும், சுவனம் பதியினை - சுவர்க்கலோகத்தையும், அமரர் பொருந்துஇடம் - தேவர்களான மலாயிக்கத்துமார்கள் தங்கிய தானங்களாகிய, அடுக்கு அடுக்கு அவையை - ஒழுங்கொழுங்கா யுள்ள அவைகளையும், வடிவு உற - அழகு பொருந்தும்வண்ணம், தனது பேர்ஒளி அதனால் வகுத்து - தனது பெரிய பிரகாசத்தினால் வகைப்படுத்தி, வேறு வேறு என அமைத்தே - வேறுவேறு என்று சொல்லும்படி செய்து, உடலினுக்கு உயிர் ஆய் - சரீரத்திற்கு ஜீவனாகவும், உயிருக்கு உடல் ஆய் - ஜீ்வனுக்குச் சரீரமாகவும், உறைந்த மெய் பொருளை - வைகிய சத்திய வத்து வான அல்லாகுவத்த ஆலாவை, புகல்வாழ் - யாம் துதிப்பாம்.

 

பொழிப்புரை 

     சமுத்திரத்தையும், பருவதத்தையும், சூரிய சந்திர நட்சத்திரங்களையும் ஆகாயத்தையும், அறு சுடன் குறுசையும், பூமியையும், சுவர்க்கலோகத்தையும், தேவர்களான மலாயிக்கத்துமார்கள் தங்கிய வானங்களாகிய ஒழுங்கொழுங்காயுள்ள அவைகளையும், அழகு பொருந்தும் வண்ணம் தனது பெரிய பிரகாசத்தினால் வகைப்படுத்தி வேறு வேறு என்று சொல்லும்படி செய்து சரீரத்திற்கு ஜீவனாகவும் ஜீவனுக்குச் சரீரமாகவும், வைகிய சத்திய வத்துவான அல்லாகு சுபுகானகுவத்த ஆலாவை யாம் துதிப்பாம்.

 

வேறு

 

     5. அருமறை தெரிந்துநீதி நெறிமுறை நடந்துதீனிவ்

            வகிலதல மெங்கு மீறவே

      யொருகவிகை கொண்டுமாறு படுமவரை வென்றுநாளு

            முறுபுகழ் சிறந்த வாழ்வுளோர்

      திருவொளி வெனும்ஹபீபு நபி முகம்ம தன்றுவானர்

            சிரமிசை நடந்து சோர்வுறா

      விருசரண நம்பினோர்கள் வரிசைக ணிறைந்தபேர்க

           ளெவரினு முயர்ந்த பேர்களே.

5

பதவுரை 

      அருமறை தெரிந்து - அருமையான புறக்கானுல் அலீமென்னும் வேதத்தை யுணர்ந்து, நெறிமுறை நடந்து -