முதற்பாகம்
சன்மார்க்கத்தினது
ஒழுங்கில் நடந்து, தீன் இ அகிலம் - தீனுல் இஸ்லாமென்னும் மார்க்கமானது இந்தப் பூலோகத்தினது,
தலம் எங்கும் மீறவே - தானங்களெவ் விடத்தும் அதிகரிக்கும்படி, ஒரு கவிகை கொண்டு - ஒப்புற்ற
சந்திர வட்டக் குடையைக் கொண்டு, மாறுபடும் அவரை வென்று - விரோதித்தவர்களை ஜெயித்து, நாளும்
உறு புகழ் சிறந்த - பிரதி தினமும் பொருந்தாநிற்கும் கீர்த்தியானது சிறக்கப் பெற்ற வாழ்வு
உளோர் - வாழ்வை யுள்ளவர்களான, திருஒளிவு எனும் - தெய்வீகந்தங்கிய பிரகாச மென்னும், ஹபீபு
நபி முகம்மது - ஹபீபென்று கூறும் காரணப் பெயரையுடைய நாயகம் நபி முகம்மது முஸ்தபா றசூல் சல்லல்லாகு
அலைகி வசல்லமவர்கள், அன்று - அந்த மிகுறாஜினிரவில், வானர் சிரமிசை - தேவர்களாகிய மலாயிக்கத்துமார்களின்
சிரமீது, நடந்து சோர்வுஉறா - நடந்து தளர்வடையாத, இரு சரணம் நம்பினோர்கள் - இரண்டு பாதங்களையும்
விசுவசித்தவர்கள், வரிசைகள் நிறைந்த பேர்கள் - சங்கைகள் நிறைந்தவர்கள், எவரினும் உயர்ந்த
பேர்கள் - யாவரிலும் மேலானவர்கள்.
பொழிப்புரை
அருமையான புறுக்கானுல் அலீமென்னும் வேதத்தையுணர்ந்து
சன்மார்க்கத்தினது ஒழுங்கில் நடந்து தீனுல் இஸ்லாமென்னும் மார்க்கமானது இந்தப் பூலோகத்தினது
தானங்களெவ் விடத்தும் அதிகரிக்கும்படி ஒப்பற்ற சந்திரவட்டக் குடையைக் கொண்டு விரோதித்தவர்களை
ஜெயித்துப் பிரதி தினமும் பொருந்தா நிற்கும் கீர்த்தியானது சிறக்கப் பெற்ற வாழ்வை யுள்ளவர்களான
தெய்வீகந் தங்கிய பிரகாச மென்னும் ஹபீபென்று கூறும் காரணப் பெயரையுடைய நாயகம் நபி முகம்மது
முஸ்தபா றசூல் சல்லல்லாகு அலைகி வசல்லமவர்கள் அந்த மிகுறாஜினிரவில் தேவர்களாகிய மலாயிக்கத்துமார்களின்
சிர மீது நடந்து தளராத இரண்டு பாதங்களையும் விசுவசித்தவர்கள் சங்கைகள் நிறைந்தவர்கள், யாவரிலும்
மேலானவர்கள்.
வேறு
6.
கவியா
லுரைத்தபுகழ் பெறுவார் மிகுத்தகவி
யடைவார்
கலக்க மறவே
செவியார மெய்ப்பொருளை
யறிவார் மனத்தினுறு
செயல்கே
டகற்றி விடுவார்
புவியார
மொய்த்தநெறி மறைநாலினுக்குமொரு
பொறியா யுதித்த வடிவார்
நபியார்
சுவர்க்கபதி நயினார் பதத்துணையை
நடுநாவில்
வைத்த வர்களே.
6
|