பக்கம் எண் :

சீறாப்புராணம்

8


முதற்பாகம்
 

பதவுரை 

     புவி ஆர - உலகத்தின் கண் நிரம்பும் வண்ணம், மொய்த்தநெறி - மொய்க்கப் பெற்ற சன்மார்க்கத்தினது, மறை நாலினுக்கும் - நான்கு வேதங்களுக்கும், ஒரு பொறி ஆய் - ஒப்பற்ற அடையாளமாய், உதித்த வடிவார் - தோன்றிய அழகை யுடையவர்களும், நவிஆர் - சிறப்புப் பொருந்திய, சுவர்க்கம் பதி நயினார் - சுவர்க்க லோகத்தினது நயினாருமான நாயகம் நபி முகம்மது முஸ்தபா றசூல் சல்லல்லாகு அலைகி வசல்லமவர்களின், பதம் துணையை - இரு பாதங்களையும், நடு நாவில் - நீதியை யுடைய நாக்கினிடத்து, வைத்தவர்கள் ஏ - வைத்துத் துதித்தோர்கள். கவியால் - பாக்களினால், உரைத்த புகழ்பெறுவார் - கூறிய கீர்த்தியை யடைவார்கள், மிகுத்த கவிஅடைவார் - அதிகக் கவிகளைப் பெறுவார்கள், கலக்கம் அறஏ - அச்சமற, செவி ஆர - காதுகளினால் பொருந்தும்படி, மெய்பொருளை அறிவார் - சத்திய வத்துவ யுணருவார்கள், மனத்தின் உறு - இரு தயத்தின்கண் தங்கிய, செயல் கேடு - கேடான செயல்களை, அகற்றி விடுவார் - நீக்கி விடுவார்கள்.

 

பொழிப்புரை

     உலகத்தின் கண் நிரம்பும் வண்ணம் மொய்க்கப் பெற்ற சன்மார்க்கத்தினது நான்கு வேதங்களுக்கும் ஒப்பற்ற அடையாளமாய்த் தோன்றிய அழகை உடையவர்களும் சிறப்புப் பொருந்திய சுவர்க்க லோகத்தினது நயினாருமான நாயகம் நபி முகம்மது முஸ்தபா றசூல் சல்லல்லாகு அலைகி வசல்லமவர்களின் இரு பாதங்களையும் நீதியையுடைய நாக்கினிடத்து வைத்துத் துதித்தோர்கள் பாக்களினால் கூறிய கீர்த்தியை யடைவார்கள். அதிகக் கவிகளைப் பெறுவார்கள். அச்சமறக் காதுகளினால் பொருந்தும்படி சத்திய வத்துவை உணருவார்கள். இருதயத்தின் கண் தங்கிய கேடான செயல்களை நீக்கி விடுவார்கள்.

 

வேறு

 

7. ஆதிதன் கிருபை தாங்கி யகிலமீ தரசு வைகித்

   தீதிலாச் சோதி போலத் தீன்பயிர் விளக்கஞ் செய்தே

   மூதறி வுடைய ரான முறுசலீன் களையெந் நாளும்

   போதர வுடனே போற்றிப் புந்தியின் மகிழ்ச்சி செய்வாம்.

7

பதவுரை

      ஆதிதன் - யாவற்றிற்கும் முதன்மையனாகிய அல்லாகு சுபுகானகு வத்த ஆலாவின், கிருபை தாங்கி - காருண்ணியத்தைத்