பக்கம் எண் :

சீறாப்புராணம்

9


முதற்பாகம்
 

தாங்கப் பெற்று, அகிலம் மீது - பூமியின் மிசை, அரசு வைகி - அரசாகத் தங்கியிருந்து, தீது இலா - களங்கமற்ற, சோதி போல - சூரியனைப் போல, தீன்பயிர் - தீனுல் இஸ்லாமென்னும் மார்க்கப் பயிரை, விளக்கஞ்செய்து ஏ - விளக்கி, மூது அறிவு உடையர் ஆன - முதிர்ந்த ஞானத்தை யுடையவர்களான, முறுசலீன்களை - முறுச லீன்களாகிய முன்னூற்றி முப்பத்தி மூன்று நபிமார்களை, எந்நாளும் - யாம் எந்தக்காலமும், போதரவு உடன், ஏ போற்றி - பேணுதலோடு துதித்து, புந்தியின் மகிழ்ச்சி செய்வாம் - மனதினிடத்து மகிழ்ச்சி செய்வாம்.

 

பொழிப்புரை

      யாவற்றிற்கும் முதன்மையனாகிய அல்லாகு சுபுகானகு வத்த ஆலாவின் காருண்ணியத்தைத் தாங்கப் பெற்றுப் பூமியின்மிசை அரசாகத் தங்கியிருந்து களங்கமற்ற சூரியனைப் போலத் தீனுல் இஸ்லாமென்னும் மார்க்கப் பயிரை விளக்கி முதிர்ந்த ஞானத்தையுடையவர்களான முறுசலீங்களாகிய முன்னூற்றி முப்பத்தி மூன்று நபிமார்களை யாம் எந்தக் காலமும் பேணுதலோடு துதித்து மனதினிடத்து மகிழ்ச்சி செய்வாம். 

 

வேறு

 

     8. தாரா தரத்தையே மேலே கவிக்கவே

            தாடாண்மை பெற்ற நயினார்

       பேரா யுதிக்கவே வானோ ருரைக்கவே

            பேறாய் விளக்கு முரவோ

       ராராய்வின் மிக்கபேர் நூறாயிரத்துநா

            லாறாயிரத்து நபிமார்

       மாராய மிக்கபேர் வாயார வைத்தபேர்

            வாழ்வார் சுவர்க்க பதியே.

8

பதவுரை 

      தாராதரத்தையே மேலே கவிக்கவே - மேகக்குடையை மேலே கவிக்கும் வண்ணம், தாடாண்மை பெற்ற நயினார் - பிரயத்தனத்தைப் பெற்ற நயினாரான நமது நாயகம் நபி முகம்மது முஸ்தபா றசூல் சல்லல்லாகு அலைகி வசல்லமவர்கள், பேர் ஆய் உதிக்கவே - கீர்த்தியாய்த் தோற்றமாவதை, வானோர் உரைக்கவே தேவர்களாகிய மலாயிக்கத்து மார்கள் கூற, பேறுஆய் விளங்கும் உரவோர் - அதைப் பேறாக விளக்கஞ் செய்யும் அறிஞர்களும், ஆராய்வில்மிக்கபேர் - ஆராய்வில் மிகுந்தபேர்நூறு ஆயிரத்து நாலு ஆறு ஆயிரத்து நபிமார் - கீர்த்தியையுடைய இலட்சத்து இருபத்து நான்காயிரம் நபிமார்களுமான, மாராயம் மிக்கபேர் - விசேட