முதற்பாகம்
காதுகளினால்
கேள்வியுற்று அந்தக் காபிர்களைப் பார்த்து எக்காலமும் அகலாத சினேகம் யானென்று
சொல்லப்பட்டவர்களை விரோதமாக்கும் விஷத்தைக் கொண்ட தனது நாவினாற் சொல்லுகின்றான்.
1642.
முகிற்கவிகை
முகம்மதிடஞ் சென்றுசிறி
துத்தரத்தை
மொழிந்தி யானோர்
பகற்பொழுதி
னவனுரையா லவனெடுத்த
நெறியனைத்தும் பழுதி லாக்கி
நிகர்க்கரிய
குபலலது முதல்பிறிதொன்
றில்லையென
நிறுத்தி மேலும்
விகற்பமிலை
யெனப்படுத்தி வருவனென
மொழிந்தெழுந்தான் வீரர்க் கன்றே.
5
(இ-ள்) யான்
மேகக் குடையையுடைய அந்த முகம்ம தென்பவனிடத்திற் சென்று சிறிது உத்தரங்களை வினாவி ஒரு
பகற்பொழுதிலேயே அவனின் வார்த்தைகளினால் அவன் எடுத்த ஒழுங்குகளெல்லாவற்றையும்
குற்றத்திலாக்கும்படி செய்து உவமைக் கருமையான நமது குபலென்னும் தம்பிரா னல்லாது வேறே யொரு
தெய்வமுமில்லை யென நிலைநாட்டி மேலும் வேற்றுமை இல்லையென்று சொல்லும்படி படுத்தி வருவேனென்று
வீரர்களான அந்தக் காபிர்களுக்குச் சொல்லி யெழும்பினான்.
1643.
ஒருகாலுந் தறுகாது
குணக்கெழுந்து
குடக்கோடற் குறும்வெய் யோனை
யிருகாலும்
வழங்காதான் முன்னோடி
மறிப்பனெனு
மியற்கை போலக்
குருகாலு மலர்வாவி
புடைசூழு
மக்கநகர்க் குரிசி றன்பாற்
பொருகாலக்
கதிரிலைவேல் வலனிலங்க
விரைவினொடும் புறப்பட் டானே.
6
(இ-ள்)
அவ்வித மெழும்பின உத்துபாவென்பவன் ஒரு காலத்திலும் தடைப்படாது கீழ்த்திசையி லுதயமாய்
மேற்றிசைக்கு ஓடுதற்குப் பொருந்தா நிற்கும் சூரியனை இரண்டு கால்களும் வழங்கப் பெறாதவனான ஒரு
முடவன் அதன் முன்னாக ஓடிச் சென்று தடைப்படுத்துவேனென்று சொல்லும் தன்மையைப் போலப்
பக்கங்களில் அன்னப்பட்சிகள் ஆடா நிற்கும் தாமரைப் புஷ்பங்களையுடைய தடாகங்கள் வளைந்த
திருமக்கமா நகரத்தையுடைய குரிசிலான நபிமுகம்மது சல்லல்லாகு அலைகிவசல்ல மவர்களினிடத்தில்
குற்றத்தைக் கொப்பளிக்கும்
|