முதற்பாகம்
சொல்லிய
வார்த்தைகளை அறிவற்ற ஜனங்களாகிய அந்த அபூஜகிலின் கூட்டத்தார்கள் தங்களின் காதுகளினால்
கேள்வியுற்றுப் பெருகிய அஃறிணைச் சாதிக ளெல்லாவற்றையும் அவைகளின் மனசை வேற்றுமைப்படுத்தி
ஆசையோடு பேசும் வண்ணம் செய்து சமுத்திரங்களையும் மலைகளையும் தங்களின் நிலைமையை மாறும்படி
செய்பவனான அந்த முகம்மதென்பவன் இந்த உத்துபாவினுடைய அழகிய மனசை வேற்றுமைப்படுத்துவது
அவனுக்கு அருமையான காரியமா? இல்லையென்று சிரித்துச் சொன்னார்கள்.
1661.
கனைத்தமுரட்
கரிநிகர்த்த வுத்துபா
கலங்கியகட் டுரையு நேர்ந்தங்
கினத்தவர்க
ளுரைத்ததுவுஞ் சரதமெனச்
சிரந்தூக்கி யெண்ணித் தேர்ந்து
மனத்தடக்கித்
தீனெனுமோர் பெரும்பயத்தைப்
புறத்தாக்கி வரிவி லேந்து
முனைத்தடக்கை
யபூசகல்தன் குலத்தோரை
யெதிர்நோக்கி மொழிவ தானான்.
3
(இ-ள்)
அப்போது நீண்ட கோதண்டத்தைத் தாங்கும் துணிகரத்தைக் கொண்ட பெரிய கையையுடைய
அபூஜகிலென்பவன் ஆரவாரியா நிற்கும் அமையாமையையுடைய யானையைப் போன்ற உத்துபாவென்பவன்
கலக்கமுற்றுச் சொன்ன உறுதி வாக்கியத்தையும் அதை மனசின்கண் நேர்ந்து அவ்விடத்தில்
இனத்தவர்களான அந்தக் காபிர்கள் சொன்னதையும் சத்தியமென்று ஆலோசித்துத் தெளிந்து தனது
மனசின்கண் அமையும்படி செய்துத் தலையை யுயர்த்தித் தீனென்று சொல்லும் ஒப்பற்ற பெரிய
பயங்கரத்தை மனசை விட்டும் வெளியிலாக்கித் தனது கூட்டத்தார்களை எதிராகப் பார்த்துச்
சொல்ல ஆரம்பித்தான்.
1662.
எத்திறத்து
மெப்புதுமை விளைத்திடினு
மம்மாயத்
திடைப்ப டாத
புத்தியினும்
வாள்வலியின் றிடத்தானும்
வஞ்சனையைப் பொதிந்து தோன்றுஞ்
சத்துருவா
முகம்மதுத னுயிர்விசும்பு
குடிபுகுதத்
தக்க தாக்கும்
பத்தியின
னினைத்தபடி முடித்திடுவன்
பார்மினெனப் பகர்ந்து மாதோ.
4
(இ-ள்) என்ன
வலிமையாலும் என்ன ஆச்சரியங்களைச் செய்தாலும் அந்தத் தந்திரத்தின்கண் அகப்படாத
அறிவாலும் வாள் வலிமையி னுறுதியாலும் பொய்மையைப் பொதிந்து தோன்றா
|