முதற்பாகம்
அதிகரித்து
இருவர்களும் சுவர்க்கலோகத்தையும் இழக்கப் பெற்றுப் பழைய இந்தப் பூலோகத்தின் கண் வந்து
சேர்ந்து வேறு வேறான திசைகளில் மயக்கமுற்றுத் தடுமாறிக் கொடிய
செய்கைகளுக்குரியவர்களானார்கள்.
132.
ஆதியே
ஹக்கா றப்பனா விறையே
யழிவில்லாப் பேரின்ப வாழ்வே
நீதியே
யெனவும் பலதரந் தவுபா
நிகழ்த்தியுந் துன்பம்விட் டொழியாப்
போதிலே
யெனது முதுகிடத் துறைந்த
பொருளொளிச் சிறப்பினும் பொருட்டாற்
சோதியே
தவுபாத் தனைக்கபூ லாக்கென்
றுரைத்தனர் சுடர்முடி யாதம்.
34
(இ-ள்) அவ்விதம், ஆகிய பிரகாசத்தைக்
கொண்ட கிரீடத்தைத் தரித்த நபி ஆதமலை கிஸ்ஸலா மவர்கள் யாவற்றிற்கு முதன்மையனான
நாயகனே! ஹக்கனே! றப்பனே! இறைவனே! ஒரு காலத்தும் அழியாத பெரிய இன்பத்தையுடைய வாழ்வே!
நீதியே! எனவும் பல தடவை தௌபாச் செய்து கூறியும் வருத்தமானது விட்டு நீங்காத சமயத்தில் எனது
முதுகின்கண் தங்கிய பொருளான நாயகம் நபி முகம்மது முஸ்தபா றசூல் சல்லல்லாகு அலைகி
வசல்லமவர்களின் ஒளிவின் சிறப்பினது காரணத்தினால் சோதியாகிய ஆண்டவனே! எனது தௌபாவைக்
கபூல் செய்யென்று கூறினார்கள்.
133.
நறைதரு
மறுவி கமழ்முகம் மதுநந்
நபிதிருப் பெயர்சொலும் பொருட்டா
லிறைவனு
மாதஞ் செயுந்தவு பாவுக்
கிசைந்தினி துறக்கபூ லாக்க
வுறைதரு
துன்ப மனைத்தையும் போக்கி
யூழ்வினை பின்புமொன் றாக்க
மறுமதி யகடு
தொடுமுடி யறபா
மலையினி லிருவருஞ் சேர்ந்தார்.
35
(இ-ள்) வாசனையைத் தராநிற்கும்
கஸ்தூரியானது பரிமளிக்கப் பெற்ற காத்திரத்தையுடைய நமது நாயகம் நபிகட் பெருமானார் நபி
முகம்மது முஸ்தபா றசூல் சல்லல்லாகு அலைகி வசல்ல மவர்களின் தெய்வீகந் தங்கிய அபிதானத்தை
அவ்வாறு கூறிய காரணத்தினால் இறைவனான அல்லாகு சுபுகானகு வத்த ஆலாவும் நபி ஆதமலை
கிஸ்ஸலாமவர்கள் செய்கின்ற தௌபாவுக்குப் பொருந்தி இனிமையுறும்படி கபூல் செய்யத் தங்களில்
உறைப் பெற்ற வருத்தங்களெல்லாவற்றையும் ஒழித்துப்
|