முதற்பாகம்
வசல்லமவர்களின்
ஒளிவைச் சமீபித்திருக்கும்படி எனது விரல்கள் நான்கிலும் வைப்பாயாகவென்று சொல்ல, வல்லவனான
ஜல்ல ஜலாலகுவத் தஆலாவும் அவ்வாறு செய்தான். மென்மையாகிய செம்மையுடைய கலிமா விரல்,
நடுவிரல், மென்விரல், சிறுவிரல், பெருவிரல்களாகிய இந்தப்படி ஐந்து விரல்களிலும்
அந்நால்வர்களினது பிரகாசிக்கின்ற ஒளிகளானவை இருந்து பிரகாசித்தன.
130.
பகுத்தொளி விரிக்கு நகத்தொளி விருக்கும்
பண்புகண் டதிசயித் தாத
மகத்தினின் மகிழ்ந்து கண்ணிணை மலரி
னடிக்கடி வைத்துவாய் முத்தி
மிகுத்திடும் வரிசை நபிசல வாத்தை
விளக்கிவாய் மறாதெடுத் தோதி
வகுத்தவல்
லவனைப் பணிந்துவா னகத்தில்
வாழ்ந்தினி திருக்குமந் நாளில்.
32
(இ-ள்) நபி ஆத மலைகிஸ்ஸலாமவர்கள்
பிரித்துப் பிரகாசத்தைப் பரப்பாநிற்கும் நகத்தினது ஒளிவுகள் இருக்கின்ற தகுதியைப் பார்த்து
ஆச்சரியப்பட்டு மனசின்கண் சந்தோஷித்து இணையாகிய இரண்டு கண்களென்னும் புஷ்பங்களில்
அடிக்கடி வைத்து வாயினால் முத்தி அதிக வரிசையையுடைய நாயகம் நபிகட் பெருமான் நபிமுகம்மது
முஸ்தபா றசூல் சல்லல்லாகு அலைகி வசல்லமவர்களின் சலவாத்தை விளங்கச் செய்து வாயினால்
மாறாது எடுத்துச் சொல்லி யாவற்றையும் சிருஷ்டித்த வல்லவனான அல்லாகு சுபுகானகுவத்த ஆலாவைத்
தொழுது வானலோகத்தின் கண் வாழ்ந்திருக்கின்ற அந்தக் காலத்தில்.
131.
மிக்கெழி
லாத மேலவன் விதித்த
விலகலைப் பொருந்தின படியா
லக்கையின்
விரல்க ளொளிவுமுன் னிருந்த
வணியணி முதுகிடத் தாகித்
துக்கமு
மிகுந்து சுவர்க்கமு மிழந்து
தொல்லுல கடைந்துவெவ் வேறு
திக்கினின் மயங்கி யிருவரு மலைத்துத்
தீவினைக் குரியவ ரானார்.
33
(இ-ள்) மிகுந்த அழகையுடைய நபி ஆதமலை
கிஸ்ஸலாமவர்கள் மேலவனாகிய ஹக்கு சுபுகானகு வத்த ஆலாவானவன் கற்பித்த விலக்கலைப்
பொருந்தின படியால் அந்தக் கையினது விரற்களின் நகத்திலுள்ள ஒளிவுகள் முன்னர் இருந்த
பெருமையைப் பூண்ட முதுகின் கண்ணாகித் துன்பமும்
|