முதற்பாகம்
பெறுவதற்கு
அவ்வொளிவை எனது கண்களினிடத்திற் காண்கிலேனென்று சொன்னார்கள். துலாக்கோலினது
மத்தியத்தை நிகர்த்து எல்லா உலகங்களிலும் பூரணப்பட்ட நெடியவனான ஹக்கு சுபுகானகு வத்த
ஆலாவானவன் இனிமையோடும் கிருபை செய்து வல்லமையைச் செய்யா நிற்கும் நபி ஆத மலை
கிஸ்ஸலாமவர்களின் வலதுகரத்தினது கலிமா விரலின் நகத்தின் கண் வைத்தான்.
128.
வரி்ச்சுரும் பலர்த்தி நறைவிரி துருக்க
மருவுபொற் புயத்தெழி லாதம்
விரித்தக
மகிழ்ச்சி பெருக்கியென் முதுகில்
விளங்கொளி யின்னமு முளவோ
தெரித்தருள் புரியென் றிறையுடன் மொழியச்
செவ்விய முகம்மது நபிதன்
னுரித்துணைத் தோழர் நால்வருண் டவர்த
மொளிவுள வெனவுரைத் தனனே.
30
(இ-ள்) அவ்வாறு வைக்கவே இரேகைகளைக்
கொண்ட வண்டுகளானவை மலரும்படி செய்து பரிமளத்தை விரித்த குங்குமப் புஷ்பத்தினாலான மாலைகள்
பொருந்திய சிறந்த தோள்களையுடைய அழகிய நபி ஆதமலை கிஸ்ஸலாமவர்கள் உள்ளக்களிப்பை
விரியச்செய்து அதிகப்படுத்தி இறைவனான அல்லாகு சுபுகானகு வத்த ஆலாவுடன் எனது முதுகின்கண்
பிரகாசிக்கின்ற ஒளிவானது இன்னமும் முளதா? அதை எனக்குத் தெரியலாக்கிக் கிருபை புரிவாயென்று
கூற அழகிய நாயகம் நபி முகம்மது சல்லல்லாகு அலைகி வசல்லமவர்களின் சொந்தமாகிய துணைவரான
நேசர்கள் நால்வர்களுள்ளர் அவர்களின் ஒளிவுண்டு மென்று கூறினான்.
129.
அப்பெரும்
பெயர்க ணான்குபே ரொளிவு
மகுமதி னொளிவடுத் திருப்ப
வைப்பையென் விரல்க ணான்கினு மென்ன
வல்லவ னவ்வழி யமைத்தான்
மெய்ப்பெருங் கலிமா விரனடு விரன்மென்
விரற்சிறு விரற்பெரு விரல்க
ளிப்படி
விரல்க ளைந்தினு மைவர்
விளங்கொளி யுகிரிலங் கினவே.
31
(இ-ள்) அவ்விதம் கூற நபி
ஆதமலைகிஸ்ஸலாமவர்கள் அந்தப் பெருமையை யுடைய நான்கு பேர்களினது பெரிய ஒளிவையும்
அஹ்மதென்னுந் திருநாமத்தையுடைய நாயகம் நபி முகம்மது முஸ்தபா றசூல் சல்லல்லாகு அலைகி
|