முதற்பாகம்
(இ-ள்)
அவ்வாறு கூறவே நல்லநபியாகிய ஆதமலை கிஸ்ஸலாமவர்களும், மயக்கத்தை நீக்கி அறிவானது ஓங்கா
நிற்கும் நாயகம் நபி முகம்மது முஸ்தபா ஹபீபு றப்பில் ஆலமீன் றசூல் சல்லல்லாகு அலைகி
வசல்லமவர்களின் ஒளிவை எனது முன்னால் தருவாயாகவென்று இரண்டு கைகளையுமுயர்த்திக் கேட்கப்
பெரியவனான அல்லாகு சுபுகானகு வத்த ஆலாவானவன் கிருபை கூர்ந்து அவ்வொளிவைப் பெறுமுறைமையானது
இதுவென்று நெரிக்கின்ற நடுப்புருவக் காலின்மேல் நெற்றியினிடத்துப் பிரகாசிக்கும் வண்ணஞ்
செய்தான்.
எழுசீர்க்கழி நெடிலடியாசிரிய விருத்தம்
126.
தாதவிழ் மலர்த்தா ராதநன் னுதலிற்
றண்ணெனுங் கதிர்கள்விட் டொழுகுஞ்
சோதியைத் தெரிசித் தமரர்க ளணுவுந்
தோன்றுதற் கிடமற நெருங்கிக்
கோதறப் பெருகி முன்னிலை திரண்ட
குழுவினைக் கண்டுகண் குளிர்ந்து
மாதவம் பெற்றே னெனமன மகிழ்ச்சி
வாரியிற் குளித்தன ரன்றே.
28
(இ-ள்) மகரந்தங்களைக் கொண்ட
மலர்ந்த புஷ்ப மாலைகளையுடைய நபி ஆதமலை கிஸ்ஸலாமவர்களினது நல்லநெறியினிடத்துக் குளிர்ச்சி
தங்கிய கிரணங்களை விட்டு ஒழுகாநிற்கும் ஒளிவைத் தேவர்களாகிய மலாயிக்கத்துமார்கள்
அணுப்போலும் தோன்றுதற்கு இடமில்லாது செறிந்து களங்கமற அதிகரித்து முகதாவித் தெரிசித்துக்
கூடிய கூட்டத்தை அந்நபியவர்கள் பார்த்துக் கண்களானவைக் குளிர்தலுற்று யான் மகா தவத்தைப்
பெற்றேனென்று சொல்லி இருதயத்தினது சந்தோஷ சாகரத்தில் மூழ்கினார்கள்.
127.
அறவரி
தான காட்சியும் பேறு
மமரர்க ளியாவரும் பெற்றா
ரிறைவனே
யானும் பெறுவதற் கென்க
ணிடத்தினிற் றெரிகிலே னென்றார்
நிறைநடு
வாகி யுலகெலா நிறைந்த
நெடியவ னினிதருள் புரிந்து
விறல்புரி
யாதம் வலதுகைக் கலிமா
விரனகத் திடத்தில்வைத் தனனே.
29
(இ-ள்)
அன்றியும் இறைவனாகிய ஆண்டவனே! அண்டர்களான மலாயிக்கத்துமார்கள் அனைவரும் மிகவும் அரிய
காட்சியையும் பேற்றையும் பெற்றார்கள். நானும் அவ்விதம்
|