பக்கம் எண் :

சீறாப்புராணம்

72


முதற்பாகம்
 

தோள்களையுடையவராகிய அந்தப் பாலகு என்பவரின் மைந்தர் வானத்தின்கண் கிடப்பதையொத்த மின்னலானது பிரகாசியா நிற்குங் கூர்மை தங்கிய வாளாயுதத்தையுடைய அரசரான றாகுவா வென்பவ ரிடத்தில் அவ்வொளிவானது இருந்து கூனானது கிடந்ததைப் போன்ற இளஞ் சந்திரன் போலும் இரத்தக் கறையையுடைய கொம்புகளின் யானைகளினது மன்னவர்கள் தங்களின் கைகளைக் குவித்து வணங்கும்படி நட்சத்திரங்கள் கிடக்கப் பெற்று விரிந்த வானலோகத்தினது சந்திரனென்று கூறும் குடையையுடைய இராஜ ராஜரென்று சொல்லச் செய்தது.

 

     147. வாரணி முரச மிடியெனக் கறங்கும்

              வாயிலான் றாகுவா மதலைத்

         தாரணித் தருவா யுதித்தசா றூகு

              தன்னிடத் திருந்தெழில் சிறந்து

         காரணக் குரிசி லானசா றூகு

              கண்ணிணை மணியென விளங்கு

         மேரணிப் புயனா கூறிடத் துறைந்தங்

              கிலங்கிய தருமறை யொளியே.

49

     (இ-ள்) அருமையாகிய வேதத்தையுடைய அவ்வொளியானது தோலினது வாரை அணியப் பெற்ற முரசமானது இடியைப் போலும் முழங்காநிற்கும் வாயிலையுடையவரான அந்த றாகுவா வென்பவரின் புத்திரர் புஷ்பங்களைத் தரித்த சோலையாய் இது உலகத்தின்கண் தோற்றமாகிய சாறூ கென்பவரிடத்தில் இருந்து அழகானது சிறக்கப் பெற்றுக் காரணத்தினது அரசரான அந்தச் சாறூ கென்பவரின் இரு கண்களினது மணியைப் போலப் பிரகாசிக்கும் அழகிய புஷ்பமாலையைத் தரித்த தோள்களை யுடையவராகிய நாகூறென்பவரிடத்தில் தங்கியிருந்து விளங்கிற்று.

 

     148. வெண்டிரை புரட்டுங் கருங்கட லுடுத்த

              மேதினிக் கரசென விளங்குந்

         திண்டிற னாகூ றுதவிய மதலைச்

              செழும்புக ழாசறு வயின்வந்

         தெண்டிசை முழுது மொருதனிச் செங்கோ

               லியற்றுவ திவனென வியற்றி

         வண்டணி மலர்த்தா ராசறு தவத்தால்

               வருமொரு வடிவுறு மதலை.

50

     (இ-ள்) வெள்ளிய அலைகளைப் புரட்டாநிற்கும் கரிய சமுத்திரத்தைத் தனக்கு ஆடையாக உடுக்கப் பெற்ற இப்பூலோகத்திற்கு இராஜ ரென்று பிரகாசித்த திண்ணிய வலிமையைக் கொண்ட அந்த நாகூறென்பவர் தந்த மைந்தர்