பக்கம் எண் :

சீறாப்புராணம்

73


முதற்பாகம்
 

செழிய கீர்த்தியையுடைய ஆச றென்பவரிடத்தில் அவ்வொளியானது வந்து எட்டுத் திக்குகள் அடங்கலிலும் ஒப்பற்ற ஏகச்செங்கோல் செய்பவர் இவரென்று இயற்றி வண்டுகள் தங்கிய அழகிய புஷ்ப மாலையைப் பொருந்திய தோள்களை யுடையவராகிய அந்த ஆசறென்பவரின் தவத்தினால் வந்த ஒப்பற்ற வடிவத்தைப் பொருந்திய புதல்வர்.

 

     149. முருகவிழ் புயத்தார் நபியிபு றாகீ

              முன்னுறைந் திருந்தபே ரொளியாற்

         கரிசமுங் கபடு மிடையறாக் கொடிய

              கனைநுமு றூதுசெய் வினையி

         னெரியெழு நாவா லெண்டிசை தடவ

              வெழுந்திடப் பெருகிய நெருப்பு

         மருவிரி கழுநீர் கறைசொரி வனச

               வாவியிற் குளிர்ந்தன வன்றே.

51

     (இ-ள்) தேனானது அவிழப் பெற்ற தோள்களையுடையவரான நபி இபுறாகீம் அலைகிஸ்ஸலாமவர்களிடத்துத் தங்கியிருந்த அந்தப் பெரிய ஒளிவினால் கரிசமும் வஞ்சகமும் நீங்காத கொடுமையான குற்றத்தினது நுமுறூ தென்னும் பெயரையுடையவன் செய்த தீவினையினது எரியா நிற்கும் எழுகின்ற நாவினால் எட்டுத் திக்குகளையும் தடவும்படி எழுந்திடப் பெருக்கமுற்ற அக்கினியானது வாசனை விரியப் பெற்ற ஆம்பலையும் பரிமளத்தைப் பொழிகின்ற தாமரையையுமுடைய தடாகத்தைப் பார்க்கிலும் மிகக் குளிர்ந்தது.

 

     150. தீனிலைக் குரிய நபியிபு றாகீஞ்

              செய்தவப் பலனொரு வடிவா

         யீனமி லிசுமா யீல்நபி யிடத்தி

              னிருந்திலங் கியவொளிப் பொருட்டால்

         வானகத் தமரர் சுடர்விரி சுவன

              மடந்தைய ரினிதுவாழ்த் தெடுப்பக்

         கானகு மலர்த்தார் செழுமணிக் கழுத்திற்

              கருவிவாய் தடவில வன்றே.

52

     (இ-ள்) தீனுள் இஸ்லாமென்னும் மார்க்க நிலைமைக்குச் சொந்தமாகிய நபி இபுறாகீம் அலைகிஸ்ஸலா மவர்கள் செய்த தவத்தின் பிரயோசனமானது ஓர் சொரூபமாய் வந்த குற்றமில்லாத நபி இசுமாயீல் அலைகிஸ்ஸலாமவர்களிடத்தில் அவ்வொளியானது தங்கியிருந்து பிரகாசித்த காரணத்தினால் வான லோகத்தின்கண்ணுள்ள தேவர்களின் கிரணத்தைப் பரப்புகின்ற சுவர்க்க லோகத்தினது அரம்பையர்களாகிய கூறுலீன்கள்