பக்கம் எண் :

சீறாப்புராணம்

726


முதற்பாகம்
 

உருவமானது உண்டாகுமென்று சொல்லி விட்டுத் தமது சிறகுகளின் ஒளிவானது ஒருவருக்குந் தெரியாது தேவலோகம் போய்ச் சேர்ந்த பின்னர், இரத்தக் கறையும் பிரகாசமும் தோற்றும் செழிய கிரணங்களைக் கொண்ட கூர்மை தங்கிய வேலாயுதந் தாங்கும் கைத்தலத்தையுடைய நமது நாயகம் நபி முகம்மது சல்லல்லாகு அலைகிவசல்ல மவர்களும், திமஸ்கு நகரத்தினது அரசனான ஹபீபென்பவனும், அறையா நிற்கும் வெற்றி முரசமானது ஒலிக்கும் வண்ணம் அருமையாகிய கஃபத்துல்லாவை நோக்கி எழுந்தார்கள்.

 

1947. வானவ ரிறையோ னருட்படி யமைத்த

          மக்கமா நகரியி னாப்பண்

     கானலர் பொதுளுங் ககுபத்துல் லாவிற்

          கடிமதிட் புறத்தொரு பாலில்

     தீனவ ருடனு மணிபெற விருந்து

          செவ்வியன் கபீபினை நோக்கி

     யீனமற் றுனது மகவெனுந் தசையை

          யிவண்கொடு வருகவென் றிசைத்தார்.

9

      (இ-ள்) அவ்வாறு எழுந்த அவர்கள் தேவர்களாகிய மலாயிக்கத்துமார்கள் இறைவனான ஹக்கு சுபுகானகுவத்த ஆலாவின் கட்டளையின் வண்ணம் பெருமை பொருந்திய மக்காப்பதியின் மத்தியில் செய்து முடித்த வாசனை தங்கிய புஷ்பமாலைகள் நெருங்கப் பெற்ற கஃபத்துல்லாவின் காவலையுடைய மதிட்புறத்தி னோர்பக்கத்தில் தீனுல் இஸ்லாமென்னும் மார்க்கத்திற் குட்பட்ட தங்களின் தோழர்களோடும் அழகாக விருந்து கொண்டு செம்மையான கீர்த்தியையுடைய ஹபீபரசனைப் பார்த்துக் குற்றமற்ற உனது மகவென்று சொல்லா நிற்கும் தசைக் கட்டியை இங்கு கொண்டு வருவாயாக வென்று கூறினார்கள்.

 

1948. அந்தநன் மொழிகேட் டடற்படை மாலிக்

          கருளிய கபீபெனு மரசன்

     சிந்தையிற் களித்து மருங்குநின் றவரைத்

          திண்ணிய தசையினைக் கொணர்கென்

     றுந்திட வுரைப்ப வோடினர் சிலவ

          ருறுபொருட் பொதிந்தெனப் பொதிந்து

     தந்தபெட் டகத்தி னொடுமெடுத் துவந்தார்

          தனுவிடு சரத்தினுங் கடிதின்.

10

      (இ-ள்) அந்த நன்மை பொருந்திய வார்த்தைகளைத் திண்ணிய ஆயுதங்களைத் தாங்கிய மாலீக்கரசனால் இவ்வுலகத்தின்கண்