|
முதற்பாகம்
தரப்பெற்ற
ஹபீபென்னும் அபிதானத்தையுடைய அதிபதியானவன் தனது இரு
காதுகளினாலுங் கேள்வியுற்று மனசின்கண் மகிழ்ச்சி
கொண்டு பக்கத்தில் நின்றிருந்த ஏவலாளர்களை நோக்கி
உயர்ச்சியாய் வலிமை தங்கிய அந்தத் தசைக் கட்டியை
இங்கு கொண்டு வாருங்களென்று உத்திரவு செய்யச் சில
ஏவலாளர்கள் வில்லிலேற்றி விடா நிற்கும் அம்பைப்
பார்க்கிலும் விரைவாய் ஓடிச் சென்று சேர்மானமான
பொருளைப் பொதிந்ததைப் போலும் பொதிந்து
வைத்திருந்த பெட்டகத்துடன் எடுத்துக் கொண்டு
வந்தார்கள்.
1949. முன்னுறப் பணித்த
பெட்டகத் திருந்த
முதிர்தசைக் கட்டியை யெடுத்து
மன்னிய குரிசின் முகம்மது நபிமுன்
வைத்தனர் சுரிகுழற் கருங்கண்
மின்னெனப் பிறழு மடந்தைய ருடனும்
விரிதிரைப் பசுங்கட லனைய
வந்நகர் மாக்க ளனைவரும் விரைவி
னடுத்ததி சயித்திட வன்றே.
11
(இ-ள்) முன்னர் பொருந்தும்படி
செய்த அந்தப் பெட்டகத்திலிருந்த முதிர்ச்சி தங்கிய
தசைக் கட்டியை அவ்வபீபரசன் முறுக்கைப் பெற்ற
கூந்தலையும் கருமை தங்கிய கண்களையுமுடைய மின்னலைப்
போலும் பிரகாசியா நிற்கும் பெண்களோடும் விரிந்த
அலைகளைக் கொண்ட பசியகடலைப் போன்ற அந்த மக்கமா
நகரத்தினது ஆடவர்களெல்லாவரும் சீக்கிரமாய் நெருங்கி
வந்து அதிசயிக்கும் வண்ணம் கைகளினாலெடுத்துக்
குரிசிலாகப் பொருந்திய நமது நாயகம் நபிமுகம்மது
முஸ்தபாறசூல் சல்லல்லாகு அலைகிவசல்ல மவர்களின்
முன்னால் வைத்தான்.
1950. கடல்கிடந் துடுத்த
பெரும்புவி யிடத்திற்
கண்டறி யாப்பெருங் காட்சி
மடலவிழ் கமல வாவிசூழ் திமஸ்கு
மன்னவன் மகவெனப் பிறந்து
மிடலுறுங் கதிர்வாண் முகம்மது பொருட்டால்
விளைக்குங்கா ரணத்தினுக் கிருந்த
வுடலெனுந் தசைத னுயிரலா தியைந்தோ
ருறுப்பெனும் வடிவுபெற் றிலவே.
12
(இ-ள்) சமுத்திரமானது கிடந்து
ஆடையாக வுடுக்கப் பெற்ற பெரிய இந்தப்
பூலோகத்தினிடத்து ஒருவரும் தமது கண்களினாற் பார்த்து
அறியாத காட்சியாய் இதழ்களானவை அவிழ்தலுற்ற
|