பக்கம் எண் :

சீறாப்புராணம்

733


முதற்பாகம்
 

தங்கிய ஆதொண்டைக் கனியோ? வென்று நினைத்துப் பார்ப்பவர்களுக்குக் குவமையிலமையாது அழகானது குடியாக இருக்கப் பெற்று அமுதமொழுகி இராகங்களெல்லாவற்றையு முண்டு ஆடவர்களின் இரு கண்களினது பார்வையாலும் சிவப்படைந்த மெல்லிய அதரத்தையுடையவள்.

 

1961. முல்லையு முருந்து நிரைத்தன போன்று

          முத்தெனத் திகழ்ந்தற நெருங்கி

     மெல்லெனச் சிவந்த மணியினிற் பிரித்து

          விளக்கியொப் பித்துவைத் தனபோல்

     வில்லிடக் கவின்கொண் டிருபுறத் தொழுங்கும்

          விரிந்தபூங் காவிகள் படர்ந்து

     சொல்லரு மனத்தா டவர்மய லிருளைத்

          துணித்திட நகைக்குமென் னகையாள்.

23

      (இ-ள்) அன்றியும், முல்லை மலரையும், இறகடிக்குருத்தையும், வரிசையாக வைத்தமை யொத்து முத்தைப் போலும் பிரகாசித்து மிகவும் செறிந்து மிருதுவாய்ச் சிவப்புற்ற மாணிக்க மணியிற் பிரித்து விளக்க மாக்கி யொப்பித்து வைத்தன போல ஒளிரும்படி அழகைக் கொண்டு இரு பக்கங்களினது வரிசையும் விரிவமைந்த பூங்காவிகள் படரப் பெற்றுச் சொல்லுதற் கரிய ஆடவரின் மனத்தினது மையலாகிய அந்தகாரத்தை துணிக்கும் வண்ணம் சிரியா நிற்கும் மெல்லிய பற்களை யுடையவள்.

 

1962. பாலென வெளிறாக் கனியென வழியாப்

          பசுமடற் றேனெனச் சிதறா

     வேலவார் குழலார் செழுங்கரத் தேந்து

          மிளங்கிளி மொழியெனக் குழறா

     வேலைவா ழமுதம் பிறந்தென வுலகம்

          விளங்கிடப் பொன்மழை பொழியச்

     சாலவு மிறந்த தருவினந் தழைப்பத்

          தரவரு மினியமென் மொழியாள்.

24

      (இ-ள்) அன்றியும், பாலைப் போல வெளிறாமலும், கனியைப் போல அழியாமலும், பசிய மடலினது தேனைப் போலச் சிதறாமலும், வாசனை தங்கிய நீண்ட கூந்தலையுடைய மாதர்கள் தங்களின் செழிய கைகளில் தாங்கா நிற்கும் இளம் பருவத்தைக் கொண்ட கிளியினது வசனத்தைப் போலக் குழறாமலும், திருப்பாற்கடலிற் றங்கிய அமுதம் பிறந்ததைப் போன்று உலகமானது விளங்கவும், பொன்மழை பொழியவும், மிகவும் பட்டுப் போன மரக் கூட்டங்கள் தழைக்கவும்,