முதற்பாகம்
நன்மையைத்
தருதற்காய் வந்த இனிமையுற்ற மெல்லிய வார்த்தைகளை
யுடையவள்.
1963. வெய்யவ னலர்த்த
விகசிதம் பொருந்தி
விரிநறைக் கமலமென் மலரிற்
செய்யவ ளிருப்ப தெனவெழில் சிறந்து
செழுங்களைக் கதிர்கள்கான் றொழுக
வையக மதிப்பத் திமஸ்கிறை யுரைத்த
வழிமுறை முகம்மதங் கழைத்த
துய்யவெண் மதிய நிகரென வுலகிற்
சொலும்படி சிறந்தமா முகத்தாள்.
25
(இ-ள்) அன்றியும், சூரியனானவன்
அலர்த்த அதனால் மலர்ந்து பரவிய தேனைச் சொரியா
நிற்கும் மெல்லிய தாமரை புஷ்பத்தில் திருமகள்
வீற்றிருப்பதைப் போலும் அழகானது சிறக்கப் பெற்றுச்
செழுமையான பிரகாசக் கிரணங்கள் பிரகாசித் தொழுகும்
வண்ணம் திமஸ்கு நகரத்தினது அதிபனாகிய ஹபீபென்பவன்
கூறிய வழிபாட்டின் முறையாக இவ்வுலகமானது மதிக்கும்படி
நாயகம் நபிமுகம்மது முஸ்தபா றசூல் சல்லல்லாகு
அலைகிவசல்ல மவர்கள் அந்த அபூகுபைசென்னும் மலையின்
மீது நின்று கொண்டு வரவழைத்த பரிசுத்தத்தைப்
பொருந்திய வெள்ளிய சந்திரனானது நிகரென்று இந்தப்
பூமியின்கண் சொல்லும்படி சிறப்புத் தங்கிய மகத்தான
முகத்தை யுடையவள்.
1964. திரளினின் மணியாய்
முரல்வினினின் வளையாய்ச்
செவ்விநெய்ப் பினிற்கமு கெனலாய்
விரிகதிர் மணிப்பூண் டாங்குமென் கழுத்தாள்
வேயினைக் கரும்பைமெல் லணையைச்
சருவிடப் பசந்து திரண்டுமென் மையவாய்த்
தழைத்தெழில் பிறங்கிய தோளாள்
வரிவளை சுமந்தி யாழினும் வியந்து
மயிர்நிரைந் தொளிருமுன் கையினாள்.
26
(இ-ள்) அன்றியும், திரட்சியில்
இரத்தின மணியாகிய, உள்ளிசையில் வலம்புரி சங்காகி,
அழகிய நெய்ப்பினிற் கமுகமரமாகி, விரிந்த
பிரகாசத்தைக் கொண்ட இரத்தினாபரணங்களைத் தாங்கா
நிற்கும் மெல்லிய கழுத்தையுடையவள். மூங்கிலையும்,
கருணைக் கரும்பையும், மெல்லிய பஞ்சணையையும் தமக்
கிணையில்லையென்று மிருதுவாக வோங்கி அழகானது
பிரகாசிக்கப் பெற்ற தோள்களையுடையவள். இரேகைக
ளமைந்த வளையல்களைத் தாங்கி வீணையைப் பார்க்கிலு
மிக வியப்படைந்து உரோமங்கள்
|