பக்கம் எண் :

சீறாப்புராணம்

739


முதற்பாகம்
 

முகம்மது சல்லல்லாகு அலைகிவசல்ல மவர்களின் பாத கமலங்களில் பணிந்து இனிமையான பலவிதப் புகழ்களை எடுத்துக் கூறித் துதித்து அங்கு சூழ்ந்திருந்த பல ஜனங்களும் அதிசயிக்கவும், கூட்டமாகிய மேகத்தை யொத்த கரிய கூந்தலானது நெகிழவும், அணிந்திருக்கும் இரத்தினாபரணங்கள் புரளவும், மின்னலைப் போலும் ஒசிதலுற்றுப் புதுமையாகத் தோற்றும்படி அங்கு தங்கி நின்றாள்.