முதற்பாகம்
(இ-ள்) அன்றியும், அழகிய முகட்டினது
நண்டைக் கவ்விக் கொண்டு நெருங்கிய அடர்ந்த
இரேகைகளை யுடைய கெற்ப முற்ற வரால் மீனை யொத்து
மணிகளினாற் செறிக்கப் பெற்ற அம்புறாத்தூணியு
மொப்பாகாத வடிவமாகி விஜயத்தை யுடைய அரசர்களின்
முன்னர் குறைவில்லாது ஊதா நிற்கும் காகளமும் நிகராகாத
தன்மையை யுடையனவாகி மென்மை யாகிப் பல ஆபரணங்களைத்
தாங்கிச் சிறிய உரோமங்கள் அடரப் பெறாத தகுதி
பொருந்திய இருகணைக் கால்களை யுடையவள்.
1972. நிறைதரு தராசின்
வடிவுறும் பரடாள்
நிரைமணிப் பந்தெனுங் குதியாள்
பொறையொடுங் கமடத் தினம்வனம் புகுந்து
பொருவறா தைந்தையு மொடுக்கி
மறைபடத் தவஞ்செய் திணைபடற் கரிதான்
மதித்திடற் குறும்புறந் தாளாள்
கறைதரா மணியின் குலமென விரல்கள்
கவின்கொளச் சிவந்தமென் பதத்தாள்.
34
(இ-ள்) அன்றியும், நிறையைத் தரா
நிற்கும் தராசினது வடிவைப் பொருந்திய பரடுகளையுடையவள்.
வரிசை வரிசையாக இரத்தினங்களை யழுத்தப் பெற்ற
பந்தென்று சொல்லும்படியான குதிக்கால்களையுடையவள்.
பொறுமையோடும் ஆமைக் கூட்டங்கள் நீரில் நுழைந்து
ஒப்பிடக் கூடாத பஞ்ச புலன்களையும் அடக்கிக் கொண்டு
மறைவாகத் தவஞ் செய்தும் ஒப்பாவதற்கருமை யானதினால்
மதித்தற்குறும் புறந்தாள்களை யுடையவள். களங்கத்தைத்
தராத மாணிக்க மணியின் கூட்டமென்று சொல்லும் வண்ணம்
விரல்கள் அழகைக் கொள்ளச் சிவப்புற்ற மெல்லிய
பாதங்களை யுடையவள்.
1973. வனமயிற் சாயற் குலமென
வெழுந்து
மரைமல ரிதழின்மேற் குலவு
மனமென நடந்து நபிமுகம் மதுத
மடிமலர்ப் பதத்தினி லிறைஞ்சி
யினியன புகழ்ந்து பலரதி சயிப்ப
வினமுகிற் கருங்குழ னெகிழப்
புனைமணிப் பிறழ மின்னென நுடங்கிப்
புதுமையிற் றோன்றநின் றனளால்.
35
(இ-ள்) இவ்வித
ரூபலாவண்ணியங்களையுடைய அந்தப் பெண் காட்டின்கண்
சஞ்சரியா நிற்கும் கூட்டமாகிய மயில்களினது சாயலைப்
போன்றெழுந்து தாமரை மலரினது இதழ்களின் மேல்
பிரகாசிக்கும் அன்ன பட்சியை யொப்ப நடந்து நாயகம்
நபி
|