பக்கம் எண் :

சீறாப்புராணம்

737


முதற்பாகம்
 

     குருமுகம் மதுநன் மொழிவழி யடங்காக்

          குபிர்க்குலந் தேய்ந்தெனத் தேய்ந்து

     தெரிவரி தெனலா யுவமையிற் பொருவாச்

          சேயிழை மடந்தைசிற் றிடையே.

31

      (இ-ள்) அன்றியும், குருவான நமது நாயகம் நபிமுகம்மது முஸ்தபா றசூல் சல்லல்லாகு அலைகி வசல்ல மவர்களின் நன்மை தங்கிய வார்த்தைகளினது வழியிலமையாத காபிர்களாகிய சத்துராதிகளின் கூட்டமானது தேய்ந்ததைப் போலுந் தேய்ந்து தெரியுதற் கரிதென்று சொல்லும் படியாய் உவமையி லடங்காத சிவந்த ஆபரணங்களையுடைய இப்பெண்ணின் சிறிய இடையானது, பெரிய மலையினடிவாரத்தில் தங்கிப் பிரகாசிக்கும் பேரழகைச் சுமந்த பொற்கொடியோ? விரிந்த கிரணங்களைக் கொண்ட இரத்தினங்க ளழுத்தப் பெற்ற மேகலாபரணத்தை மத்தியிற் கோத்து விளங்கும் வண்ணம் அசையா நிற்கும் மெல்லிய நூலோ?

 

1970. கதிரொளி வழுக்கி னரம்பையைப் பழித்துக்

          கவினுறுந் திரட்சியிற் கதத்த

மதமலைக் கரத்தின் வனப்பினை யழித்து

     மாறரு மிருதுமென் மையினி

லிதமுறச் சிவந்த விலவினைக் கடந்திட்

     டிணையடி யணையெனப் படுத்திப்

புதுமையின் விளங்கித் தவத்துறை யவரும்

     புகழ்ந்திடச் சிறந்தபொற் குறங்காள்.

32

      (இ-ள்) சந்திர சூரியரின் பிரகாசத்தை வழுக்கச் செய்யும் பளபளப்பின் வாழைமரத்தை நிந்தித்து அழகு பொருந்திய திரட்சியினாற் கதத்த மதங்களை யுடைய யானையினது துதிக்கையின் அழகைத் தூஷணித்து மாறுதற்கரிய மிருதுவான மேன்மையினில் இனிமை பொருந்தச் சிவப்புற்ற விலவம் பூவையும் தாண்டி இணையாகிய அடியினால் விளக்கமுற்றுப் பிரதிதினமும் தவத்திலே தங்கியிருக்கப் பட்டவர்களும் துதிக்கும் வண்ணம் சிறப்புப் பெற்ற அழகிய துடைகளை யுடையவள்.

 

1971. அணிமுகட் டலவன் றனைமுகந் தடுத்த

          வரிவரிச் சினைவராற் போன்று

     மணியினிற் செறித்த தூணியும் பொருவா

          வடிவதாய் வெற்றிமன் னவர்முன்

     றணிவிலா திசைக்குங் காளமும் பொருவாத்

          தன்மைய வாகிமென் மையவாய்ப்

     பணிபல சுமந்து சிறுமயிர் நெருங்காப்

          பண்புறு மிணைக்கணைக் காலாள்.

33