முதற்பாகம்
1967. பரிமளச் சிமிழோ
குலிகச்செப் பினமோ
பசுமதுக் கலசமோ வமிர்தம்
பெருகிய குடமோ காமநீ ருறைந்த
பேரிளங் குரும்பையோ கதிரின்
முருகுகொப் பிளிக்கும் வனசமென் முகையோ
முழுமணி பதித்தமென் முடியோ
கரையிலா வழகா றொழுகிய வரையோ
கவலுதற் கரிதெனுந் தனத்தாள்.
29
(இ-ள்) அன்றியும், பரிமளாதிகளை
யுடைய சிமிழ்களோ? சாதிலிங்கச் செப்புகளோ? பசிய
மதுக்கலசங்களோ? பாலானது பெருகப் பெற்ற குடங்களோ?
காமசலந் தங்கிய பெரிய இளங் குரும்பைகளோ?
பிரகாசத்தைக் கொண்ட தேனைக் கொப்பளியா நிற்கும்
மெல்லிய தாமரை மொட்டுகளோ? முழுமையான
இரத்தினங்களைப் பதித்த மிருதுவையுடைய மகுடங்களோ?
கரையில்லாத அழகென்று சொல்லும் அருவியானது ஒழுகுகின்ற
மலைகளோ? என வரையறுத்துச் சொல்லுவதற்கு முடியாத
ஸ்தனபாரங்களை யுடையவள்.
1968. தனமெனு மிருகோட்
டத்தியோ ராலிற்
றளைபடப் பிணித்தசங் கிலியோ
மனநிலை கவருங் கடிதட வரவின்
வாலணி கிடந்ததோ வலது
சினவுவிற் காமன் மலைக்குந்தன் மனைக்குஞ்
சேர்த்திய மயநடு நூலோ
வினனுட னழகு நிறைகுடி யிருந்த
விவள்வயி றணிமயி ரொழுங்கே.
30
(இ-ள்) அன்றியும், சூரியப்
பிரகாசமானது பூரணமாகக் குடியிருக்கப் பெற்ற
இப்பெண்ணினது வயிற்றின் அழகிய உரோமங்களானவை, ஸ்தன
மென்று சொல்லும் இரு கொம்புகளை யுடைய யானையை
ஓராலினிற் றளை படும்படி சேர்த்த சங்கிலியோ?
இருதயத்தினது நிலைமையைக் கவரா நிற்கும் அல்குலாகிய
சர்ப்பத்தின் வாலணயானது கிடக்கப் பெற்றதோ? அல்லது
கோபிக்கின்ற கோதண்டத்தை யுடைய மன்மதன் தனது
மலையாகிய முலைகளுக்கும் வீடாகிய கடிதடத்திற்கும்
நடுவாகச் சேர்த்த அழகிய நூலோ?
1969. பெருவரை யிடத்தி
னடியுறைந் திலங்கும்
பேரெழிற் சுமந்தபொற் கொடியோ
விரிகதிர் மணிமே கலைநடுக் கோத்து
விளங்கிட நுடங்குமெல் லிழையோ
|