முதற்பாகம்
2051. பொருந்த
மானிலத் துலவிய புகழுசை னயினா
ரருந்த வத்தினுட் பொருளென வருமபுல் காசிம்
விரிந்த மெய்நெறிச் சிந்தையி னடுவுற விளங்கி
யிருந்த மென்மலர்ப் பதமுகம் மதுமினி திருந்தார்.
37
(இ-ள்) பெரிய இவ் வுலகத்தின்கண்
பொருந்தும்படி உலவும் கீர்த்தியையுடைய உசை னயினா
ரென்பவரின் அரிய தவத்தினது அகப் பொருள் போல வந்து
இந்நூலினது கொடை நாயகனான அபுல் காசீமென்பவனின்
மலர்ந்த சத்திய மார்க்கத்தையுடைய மனத்தின்
மத்தியில் மிகவும் பிரகாசித்து இருக்கப் பெற்ற
மெல்லிய தாமரை மலரை நிகர்த்த சரணங்களை யுடைய நாயகம்
நபி முகம்மது முஸ்தபா றசூல் சல்லல்லாகு அலைகிவசல்ல
மவர்களும் இனிமையுடனிருந்தார்கள்.
|