முதற்பாகம்
தென்பவரின்
தீனுல் இஸ்லாமென்னும் மார்க்க நிலைமையை நிலையாக
நிறுத்தி அதிகப்பட வைப்பது யானல்லாது வேறு ஒருவரு
மில்லரென்று கூறினான்.
2048. மோதும் வாய்மையி
னபூலகு பெனுமவன் முரணி
யோதும் வாசகங் குபிரவ ருளங்களை யுருவிப்
போது கின்றதென் றடர்ந்துநின் றவர்பொறி கலங்கித்
தீத கற்றியங் கவரவர் மனைவயிற் சேர்ந்தார்.
34
(இ-ள்) இடியா நிற்கும்
வார்த்தைகளினால் அபூலகு பென்று கூறும் அவன் அவ்வாறு
மாறுபட்டுச் சொல்லிய வசனங்கள் காபிர்களின்
இருதயங்களை யூடுறுவிப் போயதென்று அங்கு நெருங்கி
நின்றவர்கள் தங்களின் பொறிக ளானவை கலங்கப் பெற்று
மனசினது களங்கத்தை யொழித்துத் தத்தம் வீடுகளிற்
போய்ச் சேர்ந்தார்கள்.
2049. கறைத விரிந்திடா
மனக்குறை சியங்குலக் காபி
ரறவு நொந்தகத் தடங்கின ரெனவற முதிர்ந்து
நிறையுந் தீனிலைக் குரியவர் மகிழ்ந்தநெஞ் சினராய்
மறைப டாமுகம் மதின்வழி வளர்த்திருந் தனரால்.
35
(இ-ள்) குற்றமானது தவிரப்பெறாத
இருதயத்தையுடைய அழகிய குறைஷிக் குலத்தினது காபிர்கள்
மிகவும் வருந்தித் தம் வீட்டின்கண் அடங்கினார்க
ளென்று சொல்லிப் புண்ணிய முதிர்ந்து பூரணப்பட்ட தீனுல்
இஸ்லாமென்னும் மார்க்க நிலைமைக்குச்
சொந்தமானவர்கள் சந்தோஷித்த மனத்தினர்களாய்
நாயகம் நபிமுகம்மது முஸ்தபா றசூல் சல்லல்லாகு
அலைகிவசல்ல மவர்களின் மறையாத மார்க்கத்தில்
விருத்தியடைந்திருந்தார்கள்.
2050. அரிய நாயகன் றூதுவா
னவர்க்கிறை யணுகிக்
கிரியின் மீதுநின் றரும்பெயர் நபியெனக் கிளத்தும்
வருட மாறினின் மாறுகொண் டவர்மனங் கலையத்
தெருளு மேன்மையின் முகம்மதுஞ் சிறந்திருந் தனரால்.
36
(இ-ள்) அன்றியும், அரிய நாயக
னாகிய அல்லாகு சுபுகானகுவத்த ஆலாவின் தூதுவரான
தேவர்களுக் கரசர் ஜிபுரீல் அலைகிஸ்ஸலா மவர்கள்
மலையின் மீது நெருங்கி நின்று அருமை தங்கிய பெயராகிய
நபியென்று கூறின ஆறாவது வருடத்தில் மாறு கொண்டவர்களான
காபிர்களின் மனமானது கலையும்படி தெருளா நிற்கும்
மேன்மையோடும் நாயகம் நபிமுகம்மது முஸ்தபா றசூல்
சல்லல்லாகு அலைகிவசல்ல மவர்களும் சிறப்புற்
றிருந்தார்கள்.
|