பக்கம் எண் :

சீறாப்புராணம்

762


முதற்பாகம்
 

      (இ-ள்) அவ்வாறு வந்திருக்கவே கொடிய கொலைத் தொழிலை யுடைய காபிர்கள் கோபித்துக் கூடி சத்துராதிகளின் வலிமையை அழியா நிற்கும் மனத்தினால் மிகுந்த அபீத்தாலிபென்பவரின் சந்திரனையொத்த வதனத்தைப் பார்த்து நீவிர் நமது கூட்டத்தைத் தவிரச் செய்து அவ் வபூசல்மா வென்பவனை உம்முடைய வீட்டின்கண் வைத்திருப்பது தப்பென்று கூறினார்கள்.

 

2045. பொய்த்த மாமறை முகம்மதை மனையிடைப் புகுத்தி

     வைத்தி ருந்தனை யபூசல்மா தனையுநும் மனைக்கு

     ளெய்த்து வைத்திருப் பதுபழு தெனவிக லிடராய்

     மொய்த்த டர்ந்தன ரபூசகு லொடுமுரண் மதத்தார்.

31

      (இ-ள்) அன்றியும், அபூஜகிலோடு மாறுபட்ட மதத்தைக் கொண்டவர்களான காபிர்கள் பொய்க்கப் பெற்ற பெரிய வேதத்தையுடைய முகம்மதென்பவனை உமது வீட்டின்கண் நுழைத்து வைத்தீர். அபூசல்மா வென்பவனையும் அறிந்தும் வீட்டினகம் வைத்திருப்பது குற்றமென்று பகையினது துன்பத்தோடும் இடித்து நெருங்கினார்கள்.

 

2046. எடுக்கும் வாளயில் படைக்கலம் பலகரத் தேந்தித்

     தொடுக்கும் பூசலிட் டடலபீத் தாலிபைத் துரத்தி

     விடுக்கு மென்பது மனையுட னகரையும் வெறுப்பக்

     கெடுக்கு மென்பது மபூலகு பெனுமவன் கேட்டான்.

32

      (இ-ள்) அபூலகுபென்று கூறுமவன் அவ்வாறு அடர்ந்த அவர்கள் எடா நிற்கும் வாள், வேலாகிய பல படைக்கலன்களைக் கைகளில் தாங்கித் தொடுக்குகின்ற பூசலிட்டு வலிமையைக் கொண்ட அவ்வபீத்தாலி பென்பவரை யோட்டி விடுவோ மென்பதையும் வீட்டுடன் ஊரையும் வெறுக்கும் வண்ணம் கெடுத்துப் போடுவோ மென்பதையும் தனது காதுகளினாற் கேள்வியுற்றான்.

 

2047. எனக்கு முன்னவன் றனையிடர் விளைத்திட லெனது

     மனக்கு றைப்பட ரிவைதவிர்த் திடீரெனின் மதியை

     நினைக்கு முன்பகி ரகுமது நெறிநிலை நிறுவிக்

     கனக்க வைத்தலியா னலதிலை யெனக்கழ றினனால்.

33

      (இ-ள்) அவ்வாறு கேள்வியுற்ற அவன் எனக்குத் தமையனான அவ்வபீத்தாலி பென்பவனைத் துன்பஞ் செய்தல் எனது பிரிய வீனமாகிய கருத்தாகும். இவற்றை நீங்கள் தவிர்க்க மாட்டீர்களே யானால் நினைத்தற்கு முன்னமே சந்திரனை இரு பிளவாகப் பகிர்ந்த அகமதென்னும் திருநாமத்தை யுடைய முகம்ம