முதற்பாகம்
வேதத்தின்
பரிசுத்தர்களான அங்கு தங்கிய சஹாபாக்களுக்குப் பலவித
மாகிய மிகுந்த வரிசைகளைச் செய்து வீற்றிருந்தான்.
2041. அந்த நாளையின் மக்கமா நகரவ
ரெவரும்
வந்து நற்கலி மாவுரைத் தனரெனும் வசனம்
புந்தி கூர்தரக் கேட்டனர் சிலரதிற் பொருவாச்
சிந்தை யாயினர் நகர்க்கெனத் திரும்பினர் சிலரே.
27
(இ-ள்) அத்தினத்தில் மக்கமா
நகரத்திலுள்ள யாவர்களும் வந்த நன்மை பொருந்திய
கலிமாவை ஓதினார்க ளென்னும் வார்த்தைகளைச் சில
ஜனங்கள் தங்களின் உள்ளமானது கூர்தரும்படி கேள்வியுற்று
அதனால் ஒப்பில்லாத மனத்தை யுடையவர்க ளானார்கள். சில
ஜனங்கள் தங்களின் ஊருக்கென்று சொல்லித் திரும்பிப்
பிரயாணமானார்கள்.
2042. படைக்கை வேந்துது
மானுடன் மனைவியும் பலருந்
தொடைக்கி ணங்கிய புயத்தவர் சூழ்வர நெறியி
னடக்க முன்மொழி பழுதென நவிறர நடுங்கி
யடைக்க லத்தினுங் கரவினும் பதியைவந் தடைந்தார்.
28
(இ-ள்) ஆயுதத்தைத் தாங்கிய கையை
யுடைய மன்னவரான உதுமான் றலியல்லாகு அன்கு அவர்களோடு
அவர்களின் நாயகி றுக்கையா றலியல்லாகு அன்ஹா
அவர்களும் மற்று மனேகரும் மாலைகளுக் கிணக்க மாகிய
தோள்களை யுடையவர்களான சஹா பாக்கள் தங்களை வளைந்து
வரும் வண்ணம் வழியில் நடக்க மக்கமா நகரத்தவர்கள்
கலிமா உரைத்தார்க ளென்னும் முன்னுள்ள வார்த்தையானது
தப்பென்று கூற, நடுக்கமுற்று அடைக்கலத்திலும்
கள்ளத்திலும் ஊரை வந்து சேர்ந்தார்கள்.
2043. புதிதின் மூவொரு
பதின்மரு மூவரும் புறத்திற்
சதிய றத்தனி யவரவர் சார்பினிற் சார்ந்தா
ரதில பூசல்மா வென்பவ ரறிவினி லுயர்ந்த
மதியின் மிக்கபித் தாலிபை யடுத்துவந் திருந்தார்.
29
(இ-ள்) நூதனமாக வந்ததில்
பதினாறுபேரும் பக்கத்தில் யாதொரு சதிவுமில்லாமல்
தனியாய் அவரவர்களின் சார்புகளிற் போய்ச்
சார்ந்தார்கள். அதில் அபூசல்மா வென்பவர்
அறிவினாலோங்கிய அழகில் மிகுந்த
அபீத்தாலிபென்பவரை யடுத்து வந்திருந்தார்.
2044. சினத்து வன்கொலைக்
காபிர்க டிரண்டிகல் செகுக்கு
மனத்தின் மிக்கபித் தாலிபு மதிமுக நோக்கி
யினத்தி னைத்தவிர்த் தபூசல்மா வென்பவன் றனைநும்
மனைத்த லத்தில்வைத் திருப்பது பழுதென வகுத்தார்.
30
|