பக்கம் எண் :

சீறாப்புராணம்

769


முதற்பாகம்
 

      (இ-ள்) அன்றியும், அடம்பங் கொடியினது இலையை நிகர்த்த குளம்பின் மீது கயிற்றினது கட்டையும் புள்ளியை யுடைய சிறிய தேகத்தின் பதைப்பையும், ஓங்கிப் புதையா நிற்கும் பெரு மூச்சையும் பார்த்து நெடியவனான ஹக்கு சுபுகானகுவத்த ஆலாவின் றசூல் நாயகம் நபிமுகம்மது முஸ்தபா றசூல் சல்லல்லாகு அலைகிவசல்ல மவர்கள் தங்களின் மனமானது மிகவு மிரங்கிக் காட்டின்கண் பிடிபட்ட அம்மானினிடத்து பெரிய கிருபையானது அதிகரிக்கும்படி நின்றார்கள்.

 

2064. கதிர்விரி கபீபு நிற்பக் கானகத் தருக்க ளியாவும்

     புதுமல ரலர்த்திச் செந்தேன் பொழிவமான் வருத்த நோக்கி

     விதிர்சினைக் கரங்கள் சாய்த்து மென்றழைக் கூந்தல் சோர

     மதியழிந் திரங்கிக் கண்ணீர் வடிப்பன போன்ற தன்றே.

13

      (இ-ள்) பிரகாசத்தை விரிக்கா நிற்கும் ஹபீபென்னுங் காரணப் பெயரை யுடைய நாயகம் நபிமுகம்மது முஸ்தபா றசூல் சல்லல்லாகு அலைகிவசல்ல மவர்கள் அவ்வாறு அங்கு நிற்க, அக்காட்டினது மரங்களனைத்தும் புதிய புஷ்பங்களை அலரும்படி செய்து சிவந்த தேனைச் சிந்துவது, அந்த மானின் வருத்தத்தைப் பார்த்து அசைகின்ற கிளைகளான கைகளைச் சாய்த்து மெல்லிய தழைகளாகிய கூந்தலானது சோரும் வண்ணம் தனது அறிவழிந்து அழுது கண்ணீர் சொரிவதைப் போன்றது.

 

2065. குலத்தொடும் பறவை தத்தங் குடம்பையிற் புகுதன் மானை

     நிலத்திடைக் கிடத்திக் கட்டி நின்றவேட் டுவனைக் கண்ணா

     னலத்தொடுங் காண்ப தாகா தெனநடு நடுங்கி யுள்ள

     முலைத்தறப் பெடையி னோடு மொளிப்பன போன்ற தன்றே.

14

      (இ-ள்) அன்றியும், பறவைச் சாதிகள் தங்கள் கூட்டத்தோடும் தத்தங் கூடுகளில் போய் நுழைபவை, அந்த மானை கட்டி பூமியின் கண் கிடத்தி நின்ற அவ்வேடனைக் கண்களால் நலத்தோடும் பார்ப்பது ஆகாதென்று மிகவும் நடுங்கி மனமானது உலைவுற்று அறும் வண்ணம் தங்களின் பெடைகளோடும் ஒளிப்பவற்றை போன்றது.

 

2066. ஏட்டலர் நறவ மாந்தி யிருஞ்சுரும் பிசைக்குந் தோற்றம்

     வாட்டமின் முகம்ம திங்ஙன் வந்தனர் வருந்து மானை

     மீட்டனர் வேட னீமான் விரும்பினன் பயங்க டீர்த்தார்

     கூட்டுறைந் தொளித்தன் மாற்று மெனப்பல கூய போலும்.

15