முதற்பாகம்
(இ-ள்) வள்ள லாகிய நபிகட்
பெருமானார் நபி முகம்மது முஸ்தபா றசூல் சல்லல்லாகு
அலைகிவசல்ல மவர்கள் இந்த வார்த்தைகளைச் சொல்ல,
மதீனமா நகரத்தி லுள்ளவர்களான அவர்கள் தங்களின்
மனசின்கண் சந்தோஷமானது பரவும் வண்ணம் உங்களின்
கருத்தைக் கூறுவீர்களாக வென்று கேட்க, நன்மை பொருந்திய
வார்த்தைகளைக் கொண்ட தெள்ளிய இனிய வாயைத் திறந்து
கூறுவார்கள்.
2157. அரியவ னருளினா லமரர்
கோனெனக்
கிருநிலத் தினினபி யென்னும் பேர்கொடுத்
துரியவே தமுமினி துதவி நன்னெறி
வரிசைநேர் வணக்கமும் வகுத்துப் போயினார்.
17
(இ-ள்) அரியவனான ஹக்கு
சுபுகானகுவத்த ஆலாவினது காருண்ணியத்தினால் தேவாதிப
ராகிய ஜபுறயீ லலைகிஸ்ஸலா மவர்கள் பெரிய இந்தப்
பூலோகத்தின்கண் எனக்கு நபி யென்னும் அபிதானத்தைக்
கொடுத்து இனிமையுடன் உரிமையான புறுக்கானுல் அலீமென்னும்
வேதத்தையு மீந்து நல்ல சன்மார்க்கத்தினது வரிசையைக்
கொண்ட ஒழுங்காகிய தொழுகையையும் வகுத்து விட்டு
வானலோகம் போய்ச் சேர்ந்தார்கள்.
2158. அகமகிழ்ந் திம்மொழி
யனைத்தும் வேறிதென்
றிகழ்விலா துண்மையென் றிசைந்து நீவிர்யான்
புகழ்கலி மாநெறி பொருந்தி னீரெனிற்
பகையறும் வெற்றியும் படரு மென்றரோ.
18
(இ-ள்) நீங்கள் மனக்
களிப்படைந்து இந்த வார்த்தைகளியாவும் வேறென நிந்தனை
யில்லாது சத்திய மென்று பொருந்தி நான் துதிக்கின்ற
கலிமாவினது மார்க்கத்தில் சேர்ந்தீர்களே யானால்
உங்களின் பகையானது அற்றுப் போகும் விஜயமும் படரா
நிற்கும்மென்று.
2159. நறைகமழ் முகம்மதாண்
டுரைத்த நன்மொழித்
திறனயா சறிந்துளந் தேறித் தன்வயி
னுறைபவர்க் கணிபெற வோதி வேண்டுவ
பி்றநினை விலையினி யெனவும் பேசினார்.
19
(இ-ள்) கஸ்தூரி வாசனை கமழப்
பெற்ற நாயகம் ஹபீபு றப்பில் ஆலமீன் முகம்மது முஸ்தபா
றசூல் சல்லல்லாகு அலைகிவசல்ல மவர்கள் அங்கு கூறிய நல்ல
வார்த்தைகளை வலிமையை யுடைய அயா சென்பவருணர்ந்து
மனசின்கண் தேற்றமுற்றுத் தன்னிடத்தில்
தங்கியிருக்கப் பட்டவர்களுக்கு
|