முதற்பாகம்
வாருங்களென்
றழைத்து யாதொரு குறைவு மில்லாது வரிசைகளுங் கொடுத்து அயா
சென்பவரைப் புண்ணிய தல மென்னுந் திரு மக்கமா
நகரத்திற்கு அனுப்பினார்கள்.
2153. பெருகிய கிளையவு
சென்னும் பெற்றியோர்
வரவிடுத் தவர்சிலர் மக்க மீதினி
லரிதின்வந் தனரென வறிந்து நந்நபி
பரிவுட னெழுந்தவர் பாலி னேகினார்.
13
(இ-ள்) நமது நாயகம் எம் மறைக்குந்
தாயகம் நபிகட் பெருமானார் நபிமுகம்மது முஸ்தபா றசூல்
சல்லல்லாகு அலைகிவசல்ல மவர்கள் பெருக்க முற்ற
குலத்தினைக் கொண்ட அவு சென்று கூறா நிற்கும் தன்மையை
யுடையவர்கள் அனுப்பியவர்களாகிய சில ஜனங்கள் மக்கமா
நகரத்தின்கண் அரிதில் வந்து சேர்ந்தார்க ளென்று
தெரிந்து அன்போடு மெழும்பி அவர்களிடத்திற்குச்
சென்றார்கள்.
2154. அங்குறைந் தவரகத் தன்பு
கூர்தரப்
பொங்கிய சிலமொழி புகன்று பின்னரு
மெங்கினுந் தீன்படர்ந் தேற நன்மறை
தங்கிய நாவினா லெடுத்துச் சாற்றுவார்.
14
(இ-ள்) அவ்வாறு சென்று
அவ்விடத்தில் தங்கி அவர்களின் இருதயத்தில் அன்பானது
அதிகரிக்கும்படி ஓங்கிய சில வார்த்தைகளைக் கூறிப்
பின்னரும் எவ்விடத்தும் தீனுல் இஸ்லா மென்னும்
மார்க்கமானது படர்தலுற்று வளரும் வண்ணம் நன்மை
பொருந்திய புறுக்கானுல் அலீமென்னும் வேத வசனம் தங்கப்
பெற்ற தங்களின் நாவினால் எடுத்துக் கூறுவார்கள்.
2155. பற்றல ரிடரடப்
படர்ந்திவ் வூரினி
லுற்றநீ ருள்ளிவந் ததனி னோங்கிடும்
பெற்றியுண் டெனதுரை பெற்றி ரேற்பெரும்
வெற்றியுண் டுமதிடத் தெனவி ளம்பினார்.
15
(இ-ள்) சத்துராதிகளின் துன்ப மானது
மேற்கொள்ளும் வண்ணம் பரப்புற்று இந்த மக்கமா
நகரத்தின்கண் அடைந்த நீர் நினைத்து வந்த அக்
காரியமானது வளர்ச்சியுறும் தன்மையுள்ளது. எனது
வார்த்தைகளைக் கொள்வீர்களேயானாற் உங்க
ளிடத்தில் பெரிய விஜயமு முள்ளது என்று கூறினார்கள்.
2156. வள்ளலிவ் வுரைதர மதீன
மாநக
ருள்ளவ ருள்ளகத் துவகை யூர்தர
விள்ளுநுங் கருத்தென வினவ நன்மொழி
தெள்ளிய மதுரவாய் திறந்து செப்பினார்.
16
|