பக்கம் எண் :

சீறாப்புராணம்

798


முதற்பாகம்
 

      (இ-ள்) புஷ்பங்களானவை மலரா நிற்கும் மதீனமா நகரத்தில் பிரதி தினமும் வலிமை யறாது களங்கமற்ற அவுசென்னுங் கூட்டத்தார்களுக்கும் கொலைத் தொழிலைக் கொண்ட கசுறஜூக் கூட்டத்தார்களுக்கும் கூறப் பெற்ற பெரிய பகைமை யானது ஒழியவில்லை.

 

2149. இசையுநூற் றிருபது வருட மும்கசு

     றசுவெனுங் கூட்டத்தா ரமைத்த வெற்றியே

     திசைபுகழ்ந் தனஅவு சென்னுந் திண்மையோர்

     விசயமோ ராண்டினும் வேய்ந்த தில்லையால்.

9

      (இ-ள்) பொருந்தா நிற்கும் நூற்றிருபது வருஷங்களும் கசுறஜூ வென்னும் கூட்டத்தவர்கள் பொருத்திய விஜயத்தையே எண்டிசைகளுந் துதித்தன. அவு சென்று கூறும் வலிமையை யுடையவர்களான கூட்டத்தார்கள் ஒரு வருடமாயினும் வெற்றியை யடைந்தவர்களல்லர்.

 

2150. இந்தவல் வினையினா லிடைந்தவ் வவுசுளர்

     தந்தம ரொடும்பலர் தனித்து சாவியே

     சிந்தையிற் றெளிவொடுந் தெரிந்து பார்த்துநன்

     மந்திர மீதென வகுத்துக் காட்டியே.

10

      (இ-ள்) இந்தக் கொடிய வினையினால் அந்த அவு சென்னுங் கூட்டத்தார்கள் வருந்தித் தமது பந்துக்களோடும் அனேகர் ஏகமாய் உசாவி மனசின்கண் தெளிவுடன் உணர்ந்து நோக்கி இஃது நல்ல மந்திர மென்று வகுத்து யாவர்கட்குங் காட்டி.

 

2151. மக்கமா நகருறை மன்னவர் தம்மைந

     மொக்கலி லின்புற வுவந்து சேர்த்துவந்

     திக்கணங் கசுறசை யெதிர்வ தல்லது

     புக்கிட மிலையெனப் பொருந்தக் கூறினார்.

11

      (இ-ள்) திரு மக்கமா நகரத்தின்கண் தங்கிய அரசர்களை இக்கணம் நமது கிளையில் இனிமை பொருந்தும் வண்ணம் விருப்புற்றுச் சேர்த்துக் கொண்டு வந்து கசுறசு என்னுங் கூட்டத்தாரை எதிர்வதே யல்லாமல் நமக்கு வேறே புகுமிடமில்லை யென்று அமையும்படி கூறினார்கள்.

 

2152. பெறுமுறை யீதெனப் பேசி நால்வரைத்

     திறனொடுஞ் சேகரஞ் செய்து வம்மெனக்

     குறைவற வரிசையுங் கொடுத்த யாசினை

     யறமெனு மக்கமா நகர்க்க னுப்பினார்.

12 

      (இ-ள்) நாம் வெற்றியை யடையும் ஒழுங்கானது இஃதென்று கூறி நான்கு மனிதர்களைத் திறத்தோடும் சேகரஞ் செய்து